Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
செப்டம்பர் 2007
எத்தனை காலம்தான்...
இனியன்


அடுத்தபடம் என்னாங்கிற கேள்வி எனக்குள்ளும் குறுகுறுக்க ஆரம்பிச்சிருச்சி. ஏன்னா அந்தப் படம் சிவாஜியைத் தாண்டி ஓடணுமே, டென்ஷனாத்தான் இருக்கு - ஜூனியர் விகடனில் நடிகர் ரஜினிகாந்த்.

Rajini ஒரு கற்பனை உரையாடல்

இயக்குநர்: சார் வணக்கம். ரஜினிசாருக்கு ஏத்த ஒரு அருமையான கதையோட வந்திருக்கேன். ஏ,பி,சி, எல்லா சென்டர்லயும் பின்னி எடுத்துரும்.

தயாரிப்பாளர்: இப்பல்லாம் அவருக்கு வேர்ல்ட் மார்க்கெட் சார். கதையைவிட இன்னொரு விசயந்தான் ரொம்ப முக்கியம். சந்திரமுகி, சிவாஜியில வந்த மாதிரி அவர் இளமையா இருக்கனும் பாபா மாதிரி ஆயிடக்கூடாது.

இயக்குநர்: அடடே நீங்க வேற. நம்ம கதையில தலைவருக்கு அதக்காட்டிலும் இளமையான வேஷம் சார். அவரு +2 ஸ்டூடண்டுன்னா பாத்துக்கங்களேன்.

தயாரிப்பாளர்: என்னது, +2 ஸ்டூடண்டா? மக்கள் நம்புவாங்களா?

இயக்குநர்: அதெல்லாம் எது சொன்னாலும் நம்புவாங்க. நீங்க ஏன் கவலைப்படுறீங்க.

தயாரிப்பாளர்: அப்ப ஸ்ரேயா +1 ஸ்டூடண்டா?

இயக்குநர்: ம்ஹும்... உண்மையான +1 மாணவிதான் கதாநாயகி. வேணுமின்னா, ஸ்ரேயாவுக்கு கதாநாயகனோட அக்கா வேஷம் கொடுத்துரலாம்.

தயாரிப்பாளர்: அய்யய்யோ, அந்தப் பொண்ணு கோவிச்சுக்கப்போகுது சார், சரி அத விடுங்க, கத என்னான்னு சொல்லுங்க,

இயக்குநர்: படத்தை ஓப்பன் பண்னுனா, ஒரு பெரிய பாலைவனம், அதுல 20,000 ஒட்டகங்கள் வரிசையாப் போகுது.

தயாரிப்பாளர்: (அதிர்ச்சியுடன்) இருபதாயிரமா... நான் ஒரு வழி ஆயிடுவேன் போலருக்கே.

இயக்குநர்: சிவாஜியைத் தாண்டனும்னா சும்மாவா? ஒரு பிரம்மாண்டம் இருந்தாத்தானே மக்கள் இரசிப்பாங்க, பட்ஜெட் நூறு கோடின்னு வச்சிக்குங்க. அப்புறம் உங்களுக்கு மலைப்பே வராது.

தயாரிப்பாளர்: ஆனா எனக்கு இப்ப மூச்சே வராது போலிருக்கே.

இயக்குநர்: ஒண்ணும் பயப்படாதீங்க, 3300 பிரிண்ட் போட்டு மூணே நாள்ல பணத்த அள்ளிடலாம். முதல்ல கதையைக் கேளுங்க.

தயாரிப்பாளர்: முழுக் கதையும் அப்புறம் கேட்டுக்கிறேன். முதல்ல ஒரு ஒன்லைன் சொல்லிருங்க.

இயக்குநர்: ஓ.கே. சார். ஈரான்மேல அமெரிக்கா படை எடுக்குது. அதக் கேள்விப்பட்டு இங்கயிருந்து ஒரு +2 ஸ்டூடண்ட் அங்கே போயி அமெரிக்காவை எப்படி எதிர்க்கிறான் அப்பிடிங்கறதுதான் கதை.

தயாரிப்பாளர்: அமெரிக்காவையா?

இயக்குநர்: ஆமா சார். அமெரிக்க இராணுவத்தை, ஒத்தை ஆளா நின்னு ரஜினி எப்பிடி சமாளிக்கிறார் அப்படிங்கறதுதான் கிளைமேக்ஸ்.

தயாரிப்பாளர்: கொஞ்சம் லாஜிக் இடிக்குதே சார்.

இயக்குநர்: ரஜினி படத்துல மக்கள் லாஜிக் கெல்லாம் பாக்கவே மாட்டாங்க. பொழுது போகணும்னுதான் படத்துக்கு வாராங்க, லாஜிக்கெல்லாம் யார் சார் பாக்குறாங்க.

தயாரிப்பாளர்: சரி படத்துல ஹைலைட்டா ஏதாவது ஒரு சீன் சொல்லுங்க.

இயக்குநர்: ஓ. யெஸ். நம்ம ஹீரோ மீனம்பாக்கத்துல இருந்து டெஹ்ரான் வரைக்கும் ஒரு விமானத்துல தொத்திக்கிட்டே போறாரு.

தயாரிப்பாளர்: ஏன் டிக்கெட் எடுத்துக்கிட்டே போகலாமே?

இயக்குநர்: போகலாம். ஆனா அதுல என்னசார் திரில் இருக்கு?, தொத்திகிட்டே போகும்போதுதான் நம்மால கிராபிக்ஸையும் பயன்படுத்தமுடியும். ஒரு ஷாட் பியுட்டியும் கிடைக்கும்.

தயாரிப்பாளர்: சரி செய்யுங்க. செலவையும் கொஞ்சம் பாத்துக்குங்க, மேல சொல்லுங்க.

இயக்குநர்: அங்க போயி எறங்கும்போது, அமெரிக்காவோட இராணுவ விமானங்கள் ஹீரோவை நோக்கி சீறிப் பாய்ஞ்சு வருது.

தயாரிப்பாளர்: அய்யய்யோ.... அடுத்து.

இயக்குநர்: ரஜினியா சார் அதெல்லாம் பாத்துப் பயப்படுவாரு?. என்ன செய்றாரு தெரியுமா? ஒரு டைவ் அடிச்சி ஓங்கி எட்டி காலால் உதைக்கிறாரு. அப்படியே விமானங்க எல்லாம் பறந்து போயி அந்தப் பக்கமா விழுகுது. எப்படி சார் இருக்கு இந்த சீன்?

தயாரிப்பாளர்: பிரமாதமா இருக்கு போங்க. நானே அசந்துட்டேன். தியேட்டர் ச்சும்மா அதிருமில்ல...

இயக்குநர்: கண்டிப்பா.

தயாரிப்பாளர்: ரொம்ப சந்தோஷம். நாளைக்கே நான் ரஜினி சார்ட்ட பேசிடுறேன். அடுத்த அமாவாசையில வேலய ஆரம்பிச்சிருலாம்.

(இருவரும், கை கொடுத்து மகிழ்ச்சியோடு பிரிகின்றனர்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com