Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
அக்டோபர் 2008

வேலையில்லாத கணவர்கள் எங்களுக்கு வேண்டாம்


க.மயில்

உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்காதே என்ற பார்ப்பனிய உயர்சாதி மாணவ, மாணவிகளின் போராட்டத்தின் போது மாணவிகள் தங்கள் கழுத்தில் மாட்டிய அட்டையில் இருந்த வாசகம். “வேலையில்லாத கணவர்கள் எங்களுக்கு வேண்டாம்” இந்த வாசகத்தைக் கூர்ந்து கவனித்தால் நமக்கு ஒன்று புரியும். பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வியில் இடஒதுக்கீடு தரப்பட்டால் பார்ப்பனிய மேல்சாதி மாணவர்களுக்கு பட்டப்படிப்பும், அரசாங்க வேலையும் கிடைக்காமல் போய்விடும். அதனால் நாங்கள் திருமணம் செய்ய விரும்பும் ஆண்கள் வேலையில்லாமல் ஆகிவிட்டால் எங்கள் நிலை என்ன ஆவது?

உயர்சாதி மாணவர்களும், மாணவிகளும் கையில் தட்டு ஏந்தித் தெருக்களில் ஊர்வலம் சென்றனர். மாணவிகள் வரிசையாக நின்று தெருக்களைக் கூட்டுவதைப் போல விளக்குமாற்றை ஆட்டிக் கொண்டிருந்தார்கள். கோட்டு சூட்டுடன் தெருவில் மருத்துவ மாணவர்கள் ஷு பாலிஷ் போட்டுக் காட்டினார்கள்.ஆதிக்க சாதியினரின் இந்தப் போராட்டம் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்பதற்காகவே. அவர்களது தகுதியும், திறமையும் இதுதான் என்று தங்களுடைய சாதியின் திமிரை வெளிப்படுத்தினர்.

இந்தியாவில் முதன் முதலில் இடஒதுக்கீட்டை 1902இல் மராட்டியத்தில் கோல்காப்பூர் என்னும் சமஸ்தானத்தைக் கொண்டிருந்த சாகு மகராசர்தான், ஜோதிராவ் பூலேயின் முயற்சியால் சமஸ்தானத்தின் அனைத்து வேலைகளிலும் 50% இடங்களைப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கினார். சென்னை மாகாணத்தில் 1921இல் அறிவிக்கப்பட்டு 1927இல் வகுப்புவாரியான இடஒதுக்கீட்டு ஆணையை அமைச்சர் முத்தையா முதலியார் நடைமுறைப் படுத்தினார். அரசின் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு 1947 வரை நடைமுறையில் இருந்தது. இதே ஆண்டு செப்டம்பரிலிருந்து 1950க்குள் எல்லாவிதமான இட ஒதுக்கீட்டையும் இந்திய அரசு விலக்கிக்கொண்டது.

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும், 1950 செப்டம்பரில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் காரணம் காட்டிக் கூறிவிட்டன. 1950 டிசம்பரில் வகுப்புரிமை மாநாடு ஒன்றைத் திருச்சியில் கூட்டி இடஒதுக்கீட்டிற்கு ஏற்றவாறு அரசியல் அமைப்பு சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று தந்தை பெரியார் போராட்டத்தை அறிவித்தார். இந்தப் போராட்டம் வெகு மக்கள் போராட்டமாக மாறியதன் விளைவாக இந்திய அரசமைப்பு சட்டம் முதல்முறையாக திருத்தப்பட்டு 15 (4) 16 (4) ஆம் பிரிவுகளின்படி பிற்படுத்தப்டோருக்கான இட ஒதுக்கீடு மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

20-05-1951 அன்று சட்டம் முதன்முறையாகத் திருத்தப்பட்டது. தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன் மொழிந்த பிரதமர் நேரு இந்தக் குறிப்பிட்ட விஷயமானது - குறிப்பிட்ட வடிவத்தில் இங்கு முன்மொழியப்படக் காரணம் சென்னையில் நடந்துவிட்ட சில நிகழ்ச்சிகளே ஆகும், இதுபற்றி அவையினர் அனைவருக்கும் நன்கு தெரியும்,
இதை மூடி மறைப்பது அவசியமற்றது என்று வெளிப்படையாகவே கூறினார்.

சட்டத்திருத்தம் செய்யப்பட்ட ஆண்டிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களில் மத்திய அரசு இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் சட்டத்திருத்தம் செய்யப்பட்ட பின்னரும் உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டவருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அரசியல் சட்டம் 15(5) என்ற புதிய விதி சேர்க்கப்பட்டது 104வது அரசியல் சட்ட திருத்தம் 1.2.2006இல் நடைமுறைக்கு வந்தது. தனியார் கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீடு பிற்படுத்தப் பட்டவர்களுக்கு வழங்க வழிவகை செய்யப்பட்டது.

தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அளிக்கும்போது அரசு நடத்தும் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்து சென்னை அய்.அய்.டி. கவுன்சில் தலைவர் தன்னுடைய மனுவில் இட ஒதுக்கீடு தருமாறு அய்.அய்.டி. போன்ற நிறுவனங்களை யாரும் வற்புறுத்த முடியாது என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து இட ஒதுக்கீட்டை ஆய்வு செய்ய சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு சட்டம் பட்டியல் - 1- இன்
கீழ் வரும் அனைத்து அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனங்களிலும், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங் 5-4-2006இல் அய்.அய்.எம்.( நிர்வாகவியல் கழகம் ) அய்.அய்.டி. ( இந்திய தொழில் நுட்பக் கழகம் ) உள்ளிட்ட உயர்கல்வி கூடங்களில் மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி 27% இடங்கள் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கலாம் என்று அறிவித்தார். ஏப்ரல் 26ஆம் தேதி உயர்கல்வியில் பயிலும் உயர்சாதி மாணவர்கள் இடஒதுக்கீட்டிற்கு எதிராகப் போராட்டத்தை தொடங்கினர்.

எப்படியாவது இட ஒதுக்கீட்டிற்கு எதிராக ஒரு கருத்தை உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கில் சி.என்.என்., என்.டி.டி.வி., டைம்ஸ் நவ் ஆகிய தொலைக்காட்சிகள் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்தை உருவாக்க அவைகள் தொடுத்த தலைப்பு “மண்டல் பூதம் திரும்பியது”, “தகுதியினர் மரணம்” என்பனவாகும். உயர்கல்வி இடஒதுக்கீடு வழங்கும் முயற்சிக்கு மாற்று யோசனை என்ற பெயரில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது சி.பி.எம்.. பிற்படுத்தப்பட்டோரிடையே வருமானம் அதிகம் உள்ளோருக்கு ஒதுக்கீடு வழங்கக்கூடாது. அதே நேரத்தில் முன்னேறிய சாதிகளில் உள்ள ஏழைகளுக்கு குறிப்பிட்ட விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் பிரதமரிடம் வலியுறுத்தினர்.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த யாரும் தங்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு, மீண்டும், மீண்டும், தங்களிடையே உள்ள வசதியானவருக்குப் பயனளிக்கிறது. எனவே பொருளாதார அளவுகோலைக் கொண்டு வாருங்கள் என்று வழக்குத் தொடரவில்லை. முன்னேறிய சாதியினர் ஏன் வழக்குப் போட வேண்டும்? அவர்களுக்கு என்ன இதில் அவ்வளவு அக்கறை? இதனால் காலியாகும் இடங்களைத் தாங்கள் அபகரித்துக் கொள்ளலாம் என்பதுதான்.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் 93ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தமும் அதனையொட்டி கொண்டு வரப்பட்ட (5 /2007) தனிச் சட்டமும் செல்லுபடியாகும் என்று 10.4.08 உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்காதே என்ற பார்ப்பனிய உயர்சாதி மாணவ, மாணவிகளின் போராட்டத்தின் போது மாணவிகள் தங்கள் கழுத்தில் மாட்டிய அட்டையில் இருந்த வாசகம். “வேலையில்லாத கணவர்கள் எங்களுக்கு வேண்டாம்” இந்த வாசகத்தைக் கூர்ந்து கவனித்தால் நமக்கு ஒன்று புரியும்.

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வியில் இடஒதுக்கீடு தரப்பட்டால் பார்ப்பனிய மேல்சாதி மாணவர்களுக்கு பட்டப்படிப்பும், அரசாங்க வேலையும் கிடைக்காமல் போய்விடும். அதனால் நாங்கள் திருமணம் செய்ய விரும்பும் ஆண்கள் வேலையில்லாமல் ஆகிவிட்டால் எங்கள் நிலை என்ன ஆவது? உயர்சாதி மாணவர்களும், மாணவிகளும் கையில் தட்டு ஏந்தித் தெருக்களில் ஊர்வலம் சென்றனர். மாணவிகள் வரிசையாக நின்று தெருக்களைக் கூட்டுவதைப் போல விளக்குமாற்றை ஆட்டிக் கொண்டிருந்தார்கள். கோட்டு சூட்டுடன் தெருவில் மருத்துவ மாணவர்கள் ஷு பாலிஷ் போட்டுக் காட்டினார்கள்.

ஆதிக்க சாதியினரின் இந்தப் போராட்டம் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்பதற்காகவே. அவர்களது தகுதியும், திறமையும் இதுதான் என்று தங்களுடைய சாதியின் திமிரை வெளிப்படுத்தினர். இந்தியாவில் முதன் முதலில் இடஒதுக்கீட்டை 1902இல் மராட்டியத்தில் கோல்காப்பூர் என்னும் சமஸ்தானத்தைக் கொண்டிருந்த சாகு மகராசர்தான், ஜோதிராவ் பூலேயின் முயற்சியால் சமஸ்தானத்தின் அனைத்து வேலைகளிலும் 50% இடங்களைப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கினார்.

சென்னை மாகாணத்தில் 1921இல் அறிவிக்கப்பட்டு 1927இல் வகுப்புவாரியான இடஒதுக்கீட்டு ஆணையை அமைச்சர் முத்தையா முதலியார் நடைமுறைப்படுத்தினார். அரசின் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு 1947 வரை நடைமுறையில் இருந்தது. இதே ஆண்டு செப்டம்பரிலிருந்து 1950க்குள் எல்லாவிதமான இட ஒதுக்கீட்டையும் இந்திய அரசு விலக்கிக்கொண்டது.

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு கூடாது எனறு சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும், 1950 செப்டம்பரில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் காரணம் காட்டிக் கூறிவிட்டன. 1950 டிசம்பரில் வகுப்புரிமை மாநாடு ஒன்றைத் திருச்சியில் கூட்டி இடஒதுக்கீட்டிற்கு ஏற்றவாறு அரசியல் அமைப்பு சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று தந்தை பெரியார் போராட்டத்தை அறிவித்தார். இந்தப் போராட்டம் வெகு மக்கள் போராட்டமாக மாறியதன் விளைவாக இந்திய அரசமைப்பு சட்டம் முதல்முறையாக திருத்தப்பட்டு 15 (4) 16 (4) ஆம் பிரிவுகளின்படி பிற்படுத்தப்டோருக்கான இட ஒதுக்கீடு மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

20-05-1951 அன்று சட்டம் முதன்முறையாகத் திருத்தப்பட்டது. தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன் மொழிந்த பிரதமர் நேரு இந்தக் குறிப்பிட்ட விஷயமானது - குறிப்பிட்ட வடிவத்தில் இங்கு முன் மொழியப்படக் காரணம் சென்னையில் நடந்துவிட்ட சில நிகழ்ச்சிகளே ஆகும், இது பற்றி அவையினர் அனைவருக்கும் நன்கு தெரியும்,
இதை மூடி மறைப்பது அவசியமற்றது என்று வெளிப்படையாகவே கூறினார்.

சட்டத்திருத்தம் செய்யப்பட்ட ஆண்டிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களில் மத்திய அரசு இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் சட்டத்திருத்தம் செய்யப்பட்ட பின்னரும் உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டவருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அரசியல் சட்டம் 15(5) என்ற புதிய விதி சேர்க்கப்பட்டது 104வது அரசியல் சட்ட திருத்தம் 1.2.2006இல் நடைமுறைக்கு வந்தது. தனியார் கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்க வழிவகை செய்யப்பட்டது.

தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அளிக்கும்போது அரசு நடத்தும் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்து சென்னை அய்.அய்.டி. கவுன்சில் தலைவர் தன்னுடைய மனுவில் இட ஒதுக்கீடு தருமாறு அய்.அய்.டி. போன்ற நிறுவனங்களை யாரும் வற்புறுத்த முடியாது என்று கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து இட ஒதுக்கீட்டை ஆய்வு செய்ய சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு சட்டம் பட்டியல் - 1- இன் கீழ் வரும் அனைத்து அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனங்களிலும், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங் 5-4-2006இல் அய்.அய்.எம்.(நிர்வாகவியல் கழகம்) அய்.அய்.டி. (இந்திய தொழில் நுட்பக் கழகம்) உள்ளிட்ட உயர்கல்வி கூடங்களில் மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி 27% இடங்கள் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கலாம் என்று அறிவித்தார்.

ஏப்ரல் 26ஆம் தேதி உயர்கல்வியில் பயிலும் உயர்சாதி மாணவர்கள் இடஒதுக்கீட்டிற்கு எதிராகப் போராட்டத்தை தொடங்கினர். எப்படியாவது இட ஒதுக்கீட்டிற்கு எதிராக ஒரு கருத்தை உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கில் சி.என்.என்., என்.டி.டி.வி., டைம்ஸ் நவ் ஆகிய தொலைக்காட்சிகள் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்தை உருவாக்க அவைகள் தொடுத்த தலைப்பு “மண்டல் பூதம் திரும்பியது”, “தகுதியினர் மரணம்” என்பனவாகும்.

உயர்கல்வி இடஒதுக்கீடு வழங்கும் முயற்சிக்கு மாற்று யோசனை என்ற பெயரில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது சி.பி.எம். பிற்படுத்தப்பட்டோரிடையே வருமானம் அதிகம் உள்ளோருக்கு ஒதுக்கீடு வழங்கக்கூடாது. அதே நேரத்தில் முன்னேறிய சாதிகளில் உள்ள ஏழைகளுக்கு குறிப்பிட்ட விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்
காரத் பிரதமரிடம் வலியுறுத்தினர்.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த யாரும் தங்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு, மீண்டும், மீண்டும், தங்களிடையே உள்ள வசதியானவருக்குப் பயனளிக்கிறது. எனவே பொருளாதார அளவுகோலைக் கொண்டு வாருங்கள் என்று வழக்குத் தொடரவில்லை. முன்னேறிய சாதியினர் ஏன் வழக்குப் போட வேண்டும்? அவர்களுக்கு என்ன இதில் அவ்வளவு அக்கறை? இதனால் காலியாகும் இடங்களைத் தாங்கள் அபகரித்துக் கொள்ளலாம் என்பதுதான்.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் 93ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தமும் அதனையட்டி கொண்டுவரப்பட்ட (5 /2007) தனிச் சட்டமும் செல்லுபடியாகும் என்று 10.4.08 அன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் அமைந்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு சட்ட பெஞச் தீர்ப்புக் கூறிவிட்டது.

இந்தத் தீர்ப்பு 1992இல் மண்டல் கமிஷனின் பரிந்துரைகளில் ஒன்றான 16(4) படி மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் 27% இடஒதுக்கீட்டினை அப்போதைய பிரதமர் திரு.வி.பி.சிங் போட்ட ஆணையை எதிர்த்து தொடரபட்ட வழக்கில் 9 நீதிபதிகள் அளித்த பெரும்பான்மைத் தீர்ப்பை ஒட்டியே அமைந்துள்ளது என்றாலும், இதில் கிரிமிலேயர் என்ற வருமான அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் அதிகம் வருமானம் உள்ளவர்களைப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவராகக் கருதாமல் செய்யும் இந்தத் தீர்ப்பு அடிப்படைச் சட்டத்துக்கு விரோதமான ஒன்றாகும்.

1951இல் நிறைவேறிய முதலாவது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டவர்கள் அடையாளம் காட்டும் வகையில் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் என்ற சொற்றொடர்களைப் போட்டுத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இவற்றில் ஏதாவது ஒன்றில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட வேண்டும் என்பதுதான் முக்கியம். இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத்திட்டம் அன்று. சமூக நீதிக்கான வாய்ப்பு காலங்காலமாக மறுக்கப்பட்ட மக்களுக்காக வழங்கும் ஓர் ஏற்பாடு என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாகும். வருமான அளவுகோல் ஆண்டுக்கு ஆண்டுமாறும் தன்மைகொண்டது. இதில் நிரந்தர வருமானம், நிரந்தரமல்லாத வருமானப் பிரிவுகள் உண்டு. எனவே
இந்த அளவுகோல் தவறானது.

இதைவிடக் கொடுமை, கிரிமீலேயர் அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுத்தாலும், பட்ட மேற்படிப்புகளுக்கு இடஒதுக்கீடு கூடாது என்று சில நீதிபதிகள் குறிப்பிடுவது. ஏன் இப்படிப் பிரிக்க வேண்டும்? கல்வி என்பது அனைவரும் பெற வேண்டிய ஒன்று. ரூ. 2.5 இலட்சம் ஆண்டுக்கு வருமானம் வருவதால் அவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்றால் பெரிய அளவில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படும். உதாரணமாக மாநில / மத்திய அரசு ஊழியர்கள், மருத்துவர், பொறியாளர்கள், வக்கீல்கள் எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவர்களின் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. இப்போதும் ஆண்டு வருமான வரம்பு ரூ. 4.5 இலட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது ஒரு ஆறுதலாக உள்ளது என்றாலும், பொருளாதார அடிப்படை என்பதே முற்றுமாக நீக்கப்பட வேண்டும் என்பதுதான் சரியானது.

இந்த முறையைக்கூட அய்ந்தாண்டுகளுக்கு மறுஆய்வு செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில் இப்போதே உயர் வருமானப் பிரிவினரான பிற்படுத்தப்பட்டவர்களை நீக்க வேண்டும் என்று கூறுவது எந்த அடிப்படையில்? புள்ளிவிவரங்களோ, ஆதாரங்களோ, சட்ட விதிகளோ இதற்கு அடித்தளமாக அமைந்தனவா என்றால் இல்லை. “கர்நாடக அரசுக்கும், வசந்தகுமார் என்பவருக்கும் நடைபெற்ற வழக்கில் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான ஜஸ்டீஸ் திரு.ஓ.சின்னப்பரெட்டி பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காணும் வேலையும், தகுதியும் நீதிமன்றங்களுக்குக் கிடையாது, காரணம் நீதிபதிகள் மக்களிடமிருந்து தொலைதூரத்தில் உள்ளவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றங்கள் பிற்படுத்தப்பட்ட தன்மையை அடையாளம் காணும் தகுதியைப் பெற்றவை அல்ல என்றும், அதற்கான வழிகாட்டும் நெறிகளை வகுப்பதற்கும் உகந்தது அல்ல என்றும் நம்புகிறோம். பரந்த பொதுவான வகையில் அதற்கான வாய்ப்பையோ, சமூகநீதியான பிற்படுத்தப்பட்ட தன்மையை அளந்திடவோ நாங்கள் தகுதி பெற்றிருக்கவில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதி கூறியிருக்கிறார். தனிச்சட்டம் (5/2007) தெளிவாகச் சொல்கிறது. மத்திய அரசில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்டவர்கள் யார் என்பதை மத்திய அரசு அடையாளப்படுத்திக் கூறும் என்று தெளிவாகச் சொல்லிவிட்டது.

52% மேல் உள்ள பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு 27% என்பதே மிக குறைவு, அதையும் முழுவதாக வழங்காமல் அதன் ஒரு பகுதியை உயர்சாதியினர் போட்டியிடும் தொகுதிக்கே கிடைக்கும் வண்ணம் ஒரு சூழ்ச்சிப் பொறியை வைத்தது சமூக நீதிக்கு விரோதமான செயல் அல்லவா? இந்த நிலையில் கிரிமிலேயர் என்ற பொருளாதார அளவுகோலை ஏன் வலுக்கட்டாயமாக, அரசமைப்பு சட்டத்தின் விதிகளுக்கு முரணாக நிறுத்த வேண்டும்? காரணம் ஆதிக்க வர்க்கப் பார்ப்பனியச் சிந்தனை அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்.
அய்.அய்.டி, அய்.அய்.எம். போன்ற படிப்புகளுக்கு, பல ஆயிரங்களில் இருந்து லட்ச கணக்கில் பணம் கட்டிப் படிக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்டவர்களில் வசதியானவர்கள்தான் இத்தொகையைக் கட்டிச் சேர முடியும். அப்படி வசதி படைத்தவர்களையும் வெளியே தள்ளி விட்டு வசதியில்லாதவரைச் சேரச் சொன்னால் சேருவார்களா? அப்படி யாரும் சேராமல் போனால் அந்த இடம் பொதுப்பட்டியலுக்குப் போய்விடும். திரும்ப அந்த இடம் கிடைக்காது. உயர்கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீட்டை மூன்றாண்டு காலம் படிப்படியாக நடைமுறைப்படுத்துவது என்றும், இடஒதுக்கீட்டை நடைமுறைபடுத்துவதன் காரணமாகப் பொதுப்போட்டிக்கு உரிய இடங்களின் எண்ணிக்கை மாறாத வகையில் கூடுதல் இடங்களை உருவாக்குவது என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் விவரங்களைப் பார்ப்போம்.

இந்தியாவில் உள்ள 14 பல்கலைக்கழகங்களில் அய்.அய்.டியில் உள்ள இடம் - 4000
54% கூடுதல் இடம் - 2160
மொத்த இடம் - 6160
4000 இதில் பிற்படுத்தப்பட்டவர்கள் 27% - 1080
தாழ்த்தப்பட்டவர்கள் 15% - 600
பழங்குடியினர் 7.5% - 300
மொத்த இடங்கள் ( 100% + 54% ) - 6160
பிற்+தாழ்+பழங் (27%+15%+7.5% ) - 1980

ஆக 6160 இடங்களில் 32% மட்டுமே. 49.5% இருந்த இடஒதுக்கீட்டை 32%ஆகக் குறைக்கப் போகிறது இந்திய அரசு. எனவே பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 27%லிருந்து 17.5% ஆக குறையும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 15%லிருந்து 9.7.%ஆக குறையும், பழங்குடியிருக்கு 7.5% லிருந்து 4.8%யாக குறைகிறது. ஆக கூடுதல் இடங்கள் மூலமாகவும், நீதிமன்றத் தீர்ப்பின் படியும், கிரிமீலேயர் மூலமாக அதிக இடங்களைப் பெறப்போவது பார்ப்பனிய உயர்சாதியினரே? இப்படி இந்திய அரசும், நீதிமன்றமும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டில் குளறுபடிகளைச் செய்து இடஒதுக்கீட்டைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்துக் கொள்ளாமல் இடஒதுக்கீட்டைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் 1951இல் தந்தை பெரியாரைப் போல மக்கள் போராட்டமாக மாற்றுவதன் மூலம்தான் நாம் பெற்ற இடஒதுக்கீட்டை தக்க வைத்துக் கொள்ள முடியும். இல்லை என்றால் நம் நாட்டில் அரசியல் ஜனநாயகம் இருக்கும். சமூக ஜனநாயகம் எட்டாக்கனியாகிவிடும்.

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com