Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
மே 2009

தோழர் சுப. வீரபாண்டியன் நூல் வெளியீடு

Book Release Function திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கலைஞர் தொலைக்காட்சியில் ‘ ஒன்றே சொல் ! நன்றே சொல் ! ’என்ற தலைப்பில் ஆற்றிவரும் கருத்துகளின் திரட்டு மூன்று தொகுதிகளாக வெளிந்துள்ளது. அதன் வெளியீட்டு விழா சென்னை ராணிசீதை மன்றத்தில் கடந்த 13.04.2009 திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

வானவில் புத்தகாலய உரிமையாளர் சுப. புகழேந்தி வரவேற்றார்.

இவ்விழாவிற்குத் தமிழக அரசின் மாநிலத் திட்டக்குழுத் துணைத் தலைவர் முனைவர் மு. நகநாதன் அவர்கள் தலைமை ஏற்று நூலைக்குறித்துக் கருத்துச் செறிவுமிக்க உரை நிகழ்த்தினார். அவரைத் தொடர்ந்து திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொருளாளர் அன்புத் தென்னரசன், கேலக்சி நிறுவன உரிமையாளர் ரமேஷ் பிரபா, வழக்குரைஞர்அருள்மொழி, திரைப்படக் கலைஞர் சத்தியராஜ், பேராசிரியர் பெரியார்தாசன் ஆகியோர் நூல் குறித்து உரை நிகழ்த்தினார்கள். பெரியார்தாசன் பேசும்போது, “ ஒன்றே சொல் நன்றேசொல் நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் ” என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், நூல்களை வெளியிட, நடிகர் சத்தியராஜ் பெற்றுக்கொண்டார்.

நிறைவுரையாகத் தோழர் தொல். திருமாவளவன் அரியதொரு அரசியல் கருத்துகள் அடங்கிய நெடிய உரை நிகழ்த்தி, தோழர் சுப. வீரபாண்டியன் நூல்கள் அனைவரும் படிக்க வேண்டியவை என்று வாழ்த்துரை வழங்கினார். நூலாசிரியர் சுப. வீரபாண்டியன் ஏற்புரை நல்கினார்.

நிகழ்ச்சியைச் சிறப்பாகத் தொகுத்தளித்தனர் சே. நெல்சன் மற்றும் வீரவளவன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.