Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
மே 2009

நூல் அறிமுகம்: அது - இது- எது ?

அது - இது- எது ?,
ஆசிரியர் - முத்தையா வெள்ளையன்,
வெளியீடு - கருப்புப் பிரதிகள்,
சென்னை 5
விலை : ரூ. 65

பல்வேறு ஆளுமைகளுடனான நேர்காணல்கள் என்று பத்து நேர்காணல்களின் தொகுப்பாக வெளிவந்துள்ள நூல், “அது - இது- எது ?”

நேர்காணல்களை எடுத்தவர் நூலின் தொகுப்பாசிரியர் முத்தையா வெள்ளையன். இந்நூலின் தலைப்பு அது- இது- எது ! இத்தலைப்புக்கும் இந்நூலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பது புரியவில்லை.

நூல் முன்னுரையின் தொடக்கத்தில், “ஒரு நேர்காணலைப் படிப்பது சுவாரசியமான அனுபவம். ஒருவருடைய எழுத்தில் காணக்கூடிய இறுக்கமும், அதிலுள்ள அதிகாரத் தன்மையும் பேச்சில் காணாமல் போகும் வாய்ப்புகள் அதிகம். பேச்சு வடிவில் ஒருவருடைய கருத்து வெளியாகும் போது, அது இயல்பானதாகவும், இலகுவாகவும், ஏன் சற்று குதூகலமானதாகவும் இருக்க வாய்ப்புகள் அதிகம். அதனலேயே ஓர் ஆசிரியருடைய படைப்பு புரியவில்லை என்றால், அவருடைய நேர்காணலைத் தேடிப்படி...” என்று தொகுப்பாரிசியர் சொல்வதில் இருந்து இந்நூலின் ஆழம் அல்லது அடித்தளத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

நேர்காணல் கொடுத்தவர்கள் வெவ்வேறு தளங்களில் வல்லுநர்களாக இருக்கிறார்கள் என்பதைவிட, அந்தந்த வல்லுநர்களிடம் அவரவர் சார்ந்த துறையில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் சிறப்பானவையாக இருப்பதால்,நேர்காணல் விடைகளும் சிறப்புற அமைந்துள்ளன என்பது இந்நூலின் சிறப்பு.இன்னும் சொன்னால், இந்நூலுக்குள்ளேயும் ஓர் ஆய்வு நடத்தக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.