Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
மார்ச் 2009

திருந்தட்டும் சு.சுவாமிகள்

சென்னை உயர்நீதி மன்றத்தில், நீதிபதிகளின் முன்னிலையில், பிப்ரவரி 18 அன்று, வழக்குரைஞர்கள் சிலர், சுப்பிரமணியன் சுவாமி மீது முட்டை வீசியதை அறிந்து பத்திரிகைகள் எல்லாம் பதறின. தினமணியும், இந்துவும் தலையங்கம் எழுதித் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தின. இப்போது அந்த ‘மாபெரும் வழக்கை’ ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு விசாரிக்கப் போகிறதாம்.


ஆசிரியர்

சுப.வீரபாண்டியன்

வெளியிடுபவர்:

கோ.தினகரன்

தொடர்புக்கு:

122/130-பி, என்.டி.ராமராவ் தெரு,
ரங்கராசபுரம்,
கோடம்பாக்கம்,
சென்னை - 600 024

அண்ணல் காந்தியடிகளின் கொலை வழக்கைக் கூட ஒரு நீதிபதிதான் விசாரித்தார். அரசமைப்புச் சட்டங்களில் பெரும் சிக்கல்கள் உருவாகும் போதுதான் ஐந்து, ஏழு நீதிபதிகளைக் கொண்ட குழுக்கள் விசாரிப்பது வழக்கம். ஆனால் சு.சாமியின் மீது முட்டை வீசப்பட்ட வழக்கை விசாரிக்க ஐந்து நீதிபதிகள் அமருகின்றனராம். திட்டமிட்டே சு.சாமி உருவாக்கிய கலவரம் இது. தீட்சிதர்கள் தொடுத்த வழக்கு 58 ஆவது எண்ணில் இருந்துள்ளது. எனவே அது அன்றைய தினம் நீதிமன்றத்திற்கு வருமா என்பதே உறுதியில்லை. அந்த நிலையில் தேவையில்லாமல் காலையிலேயே அவர் நீதிமன்றம் வந்துள்ளார்.

அவர் மீது முட்டை வீசியது வன்முறை என்று வருத்தப்படுவோர், இன்னொன்றையும் சிந்திக்க வேண்டும். தமிழினத்திற்கு எதிராகவும், உண்மைக்கு மாறாகவும் சு.சாமி பேசிவரும் வார்த்தைகளும் ஒரு விதத்தில் வன்முறைதான். அது கருத்தியல் வன்முறை. இன்னும் சொன்னால், வன்முறையைத் தூண்டும் வன்முறை அது. அது மட்டுமின்றி, சாதியைச் சொல்லி மற்றவர்களை இழிவுபடுத்தும் வேலையையும் அவர் செய்திருக்கிறார். அந்தச் சூழல், வழக்குரைஞர்களைக் கோபம் கொள்ளச் செய்திருக்கிறது.

ஆத்திரமூட்டப்பட்டவர்கள் இப்படி நடந்து கொள்வதென்பது ஏற்கனவே வரலாற்றில் பலமுறை நடந்துள்ளது. பகத்சிங் வழக்கில், அப்ரூவராக மாறிப் புரட்சியாளர்களைக் காட்டிக் கொடுக்க முயன்ற ஒருவன் மீது, நீதிமன்றத்திலேயே செருப்பு வீசப்பட்டுள்ளது. அண்மையில், ஈராக்கில், ஒரு பத்திரிகையாளர் ஜார்ஜ் புஷ் மீது தன் காலணிகளைக் கழற்றி வீசியதை உலகமே தொலைக்காட்சியில் பார்த்தது. ஓர் இனத்தைக் காட்டிக்கொடுக்கும், ஒரு விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் கயவர்களுக்குச் செருப்படியும், முட்டை வீச்சும் விழுவதைக் காவல்துறை கூடக் கவனமாக இருந்து எல்லா நேரங்களிலும் தடுத்து விட முடியாது.

எனவே, சு.சாமி போன்ற கருத்தியல் வன்முறையாளர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com