Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஜூன் 2009

வெள்ளைக் கொடியிலும் குருதிக் கறை

வெள்ளைக் கொடியேந்திய நடேசன், புலித்தேவன் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் - இலண்டன் சண்டே டைம்ஸ் செய்தியாளர் மேரி கொல்வின்

கடந்த பல நாட்களாகவே புலிகளின் தலைமைக்கும் மற்றும் ஐ.நா.வுக்கும் இடைப்பட்ட மத்தியஸ்தராக நான் இருந்து கொண்டிருந்தேன். நடேசன் என்னிடம் 3 வி­யங்களை ஐ.நா.வுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். தாங்கள் ஆயுதங்களைக் கீழே போடுவதாகவும், தங்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தர வேண்டுமென்றும் மற்றும் ஒரு அரசியல் தீர்வு தமிழர்களுக்கு வைக்கப்படும் என்ற நிச்சயம் வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் கொழும்பில் இருந்த ஐ.நா. விசே­ தூதுவர், விஜய் நம்பியாரோடு தொடர்பு கொண்டேன். புலிகளின் சரணடைதலுக்கான கோரிக்கைகளை நான் அவருக்குத் தெரியப்படுத்தினேன். அவரும், தான் அதை சிங்கள அரசுக்குத் தெரிவிப்பதாகக் கூறினார்.

இந்த நடவடிக்கை ஒரு சமாதானம் வருவதற்கான அறிகுறியாக எனக்குத் தோன்றியிருந்தது.

Nadesan மீண்டும் நம்பியாரைத் தொடர்பு கொண்டேன். புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டார்கள் என்று அவரிடம் கூறினேன். அவரும் தான் நடேசன் மற்றும் புலித்தேவனின் சரணடைதலின் பாதுகாப்பை சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் நிச்சயமாக்கிக் கொண்டதாகவும் கூறினார். அவர்கள் வெள்ளைக் கொடியைப் பிடித்து வந்தால் சரியயன்றும் கூறினார். சரணடைதலின் சாட்சிக்கு நம்பியாரும் அங்கு போகத் தேவையில்லையா என்று நான் கேட்டேன். அதற்கு அவசியமில்லை என்றும், வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடிக்கும்படியும் நம்பியார் கூறினார்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசன் சந்திரநேருவையும் நடேசன் ஞாயிறு இரவு தொடர்புகொண்டுள்ளார். சந்திரநேரு உடனடியாக ராஜபக்சேயுடன் தொடர்பு கொண்டுள்ளார். அதன் பிறகு நடந்தவற்றை பாராளுமன்ற உறுப்பினர் கூறினார், அதிபர், நடேசனுக்கும், அவர் குடும்பத்துக்கும் முழுப் பாதுகாப்பு தருவதாக உறுதியளித்திருந்தார். தன்னோடு 300 மக்கள் உள்ளார்கள் என நடேசன் கூறியிருந்தார். சிலர் காயப்பட்டும் இருந்தார்கள். அப்போது நான் அதிபரிடம் கூறினேன், நான் நேரில் போய் அவர்களது சரணடைதலை ஏற்கிறேன். இல்லை. எங்கள் ராணுவம் மிகவும் பெருந்தன்மையும், கட்டுப்பாடுமுடையது. நீங்கள் போர் இடத்துக்குச் செல்லத் தேவையில்லை என்றார்.

நடேசனும், புலித்தேவனும் ஆண்கள், பெண்களுமுள்ள கூட்டத்தோடு, வெள்ளைக் கொடியோடு இலங்கை ராணுவத்தை நோக்கி நடந்து வந்தார்கள். ராணுவம் அவர்களை நோக்கி எந்திரத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தது.

நடேசனின் மனைவி ஒரு சிங்களப் பெண்மணி. சிங்களத்தில் கத்தினார். அவர் சரணடைவதற்கு வருகிறார்.ஆனால் நீ அவர்களைச் சுடுகிறாய் என்றார். நடேசனின் மனைவியும் சுடப்பட்டார். சரணடைய வந்த சகலருமே சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

ஜனாதிபதியாலும், அவர் சகோதரராலும் விரட்டப்பட்ட சந்திரநேரு இப்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com