Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஜூன் 2009

கல்லறையில் இருந்து ஒரு கடிதம் !

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கில நாளிதழான நியூயார்க் டைம்ஸ் இலங்கைப் பிரச்சினை குறித்து கல்லறையில் இருந்து ஒரு கடிதம் என்ற தலைப்பில் தலையங்கம் எழுதியுள்ளது. தலையங்கம் வருமாறு :-

அப்பாவி பொதுமக்களை மனிதக் கேடயங்களாக விடுதலைப்புலிகள் பயன்படுத்தினார்கள் என்பது இலங்கையின் வாதமாகும். தற்போது நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடையே விடுதலைப்புலிகளும் பதுங்கியுள்ளனர். அவர்களை அடையாளம் கண்டறிந்து அப்புறப்படுத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை அர• கூறி வருகிறது.

ஆனால், உதவி அளிக்க முன் வந்துள்ளோர், இலங்கை அரசின் உள்நோக்கம் குறித்துச் சந்தேகிக்கிறார்கள். இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் வெளி உலகத்திற்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இலங்கை அதிபர் ராஜபக்சேயும் அவருக்கு நெருக்கமானவர்களும் தொடர்ந்து கெடுபிடியாக நடந்து கொண்டு வருகிறார்கள் என்ற சந்தேகத்தில் அர்த்தமிருப்பதாகவே தெரிகிறது.

போர் முடிவுக்கு வந்த இறுதி காலகட்டதில் சர்வதேச சமூகம் விடுத்த வேண்டுகோளை ராஜபக்சே நிராகரித்துவிட்டார். போர்ப்பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை ராஜபக்சே நிராகரித்தது மனித நேயத்திற்கு ஒவ்வாததாகும். போர்ப்பகுதியில் சிக்கிக் கொண்ட பொதுமக்களை இலங்கை ராணுவம் ஈவிரக்கமின்றி கொன்று குவித்தது.

மனித உரிமைகளுக்கான ஐ.நா. ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ள கருத்தை முழுமையாக ஆதரிக்கிறோம். இரு தரப்பினரும் நிகழ்த்திய மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச ரீதியிலான •யாதீன அமைப்பை உருவாக்கி விசாரிக்க வேண்டும். அவ்வாறு விசாரித்தால்தான் இலங்கையில் உண்மையிலேயே நடந்தது என்ன என்பது வெளி உலகத்திற்குத் தெரிய வரும்.

ஜெனீவாவில், மனித உரிமைகள் கழகத்தில் இது குறித்து நடைபெற்று வரும் விவாதம் கவனத்தில் கொள்ளத்தக்கது.

விடுதலைப்புலிகளின் முன்னணித் தலைவர்களை இலங்கை ராணுவம் ஈவிரக்கமின்றிக் கொன்று குவித்தது. இப்போது தமிழர்களுக்கு மறுவாழ்வு தர உரிய நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக இலங்கை அர• கூறி வருவது ஏற்கத்தக்கதாகவோ அல்லது நம்பத் தக்கதாகவோ இல்லை. இலங்கை அர• வெறுமனே வாய்ப்பந்தல் போட்டுக்கொண்டிருக்கிறது.

இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்களுக்குச் சம உரிமை சார்ந்த •யாதிக்கத்திற்கு வழிவகை செய்ய வேண்டும். இலங்கையில் 12 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள தமிழர்கள் அத்தேசத்தின் பூர்வீகக் குடிகளாவார்கள். காலங்காலமாக அவர்கள் அங்கு வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கு வரலாறே சான்றாகத் திகழ்கிறது.

தமிழர்களுக்கெதிரான உரிமை மீறல்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். அவர்கள் •தந்திரமாக இயங்க தடை எதுவும் இருக்கக் கூடாது. அரசியல் உள்நோக்கம் கொண்ட படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும். தங்களது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழர்கள் மீண்டும் தங்களது வாழ்விடங்களுக்குத் திரும்பிச் சென்று இயல்பாக வாழ்க்கை நடத்த உரிய வழிவகை செய்யப்பட வேண்டும்.

வெளிநாடுகளிடமிருந்து இலங்கை அர• உதவி கோரி வருகிறது. நிவாரணப்பணியை நிறைவேற்ற உதவி கேட்பதாக அது சொல்கிறது. ஆனால் உதவி செய்வதற்கு முன்பாக, அந்த உதவி உண்மையிலேயே பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சென்று சேருமா என்பதை வெளிநாடுகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நிவாரண முகாம்களுக்கு வெளிநாட்டு நிவாரணப்பணியாளர்கள் தங்குதடையின்றி சென்று வர அனுமதிக்கப்பட வேண்டும். இதற்கு இலங்கை அர• சம்மதிக்காவிட்டால் வெளிநாடுகள் உதவித்தொகையை அளிக்க முன்வரக்கூடாது.

தமிழர்கள் அனைவருமே விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள்தான் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்டச் சிங்கள வல்லாதிக்கவாதிகள் கருதுகிறார்கள்.சிங்களர்கள், தலைமுறை தலைமுறையாகத் தமிழர்களை அடக்கி, ஒடுக்கி வந்தார்கள். இந்தக் கொடுமையை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற எண்ணம் எழுச்சி பெற்றதன் அடிப்படையில்தான் வீரத் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.கொரில்லா போராளிகளாக உருவெடுத்தார்கள்.

விடுதலைப்புலிகள் வி•வரூபம் எடுத்ததற்குச் சிங்களர்களின் ஆதிக்க வெறிதான் அடிப்படைக் காரணமாகும். தமிழர்களுக்குச் சம உரிமை அளிக்கப்பட்டால்தான் இப்பிரச்சினைக்கு •மூகமான முறையில் தீர்வு காண்பது சாத்தியமாகும். ராஜபக்சே இதை உணர்ந்து கொண்டால் இலங்கையில் சாந்தியும், சமாதானமும் நிலைபெற்று ஓங்கும். இல்லையயனில், தமிழர்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும்.நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com