Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஜூன் 2009

இந்தியாவை அச்சுறுத்தும் சீனா..!

பீட்டர் மாமாவும், சுசி மாமியும் நாட்டு நடப்புகளைப் பற்றிப் பேசுவதாக தினகரன் நாளேட்டில் ஒரு செய்திவரும். 2009, மே 22 ஆம் நாளிட்ட தினகரனில் வெளியான பீட்டர் மாமா, சுசி மாமி உரையாடல் செய்தி :

“ இலங்கைல கால் ஊன்றதுக்குச் சீனா ரொம்பத் தீவிரமா முயற்சி செய்யுது ;அதைத் தடுக்கத்தான் மன்மோகன் தூதர்கள் அவசரமா போனாங்கன்னு ஒரு தகவல்

அடிபடுது.. அதுல உண்மை இருக்கா..? ”

“ நிச்சயம் உண்மை இருக்கு... இந்தியாவை நாலா பக்கமும் வளைக்க சீனா முப்பது வரு­த்துக்கு முன்னாடியே முடிவு பண்ணிருச்சு.. அப்ப இருந்து அதுக்கான காய்களை நகர்த்திக் கிட்டே வந்துருக்கு... விடுதலைப் புலிகளை ஒடுக்க இந்தியாகிட்ட ராஜபக்ச ஆயுதங்கள் கேட்டப்ப, அப்படிக் கொடுத்தா தமிழ்நாட்டு மக்கள் மத்தில அதிருப்தி வரும்னு சொல்லி மன்மோகன் மறுத்துட்டார்.. உடனே சீனா தலையிட்டு இலங்கைக்கு தாராளமா ஆயுதங்கள் கொடுத்தது. இந்தியாகிட்ட இல்லாத நவீன ஆயுதங்கள், கண்காணிப்புக் கருவிகள், இரவுநேர தாக்குதலுக்கான ஆயுதங்கள் எல்லாத்தையும் சீனா சப்ளை செஞ்சுது.. அமெரிக்காவும், இங்கிலாந்தும், ஐக்கிய நாடுகள் சபையும் எச்சரிச்ச நேரத்துலயும் ராஜபக்ச கொஞ்சம்

கூட அலட்டிக்காம ராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்துனதுக்குக் காரணமே சீனா கொடுத்த தைரியம்தான், ஐ.நா.சபை பாதுகாப்பு கவுன்சில்ல இலங்கை மேல கண்டன தீர்மானம் கொண்டு வர முயற்சி நடந்தப்ப அதைத் தடுத்து நிறுத்தினதும் சீனாதான்...” என பீட்டர் மாமா நீண்ட விளக்கம் அளிக்கும் போது சுசி மாமி குறுக்கிட்டாள்.

“ பாதுகாப்பு கவுன்சிலோட நிரந்தர உறுப்பினர்ங்கற முறையில சீனாகிட்ட வீட்டோ அதிகாரம் இருக்கு. அத வச்சு இலங்கையைக் காப்பாத்தியிருக்கு. அது தெரியுது. ஆனா, இதுக்கெல்லாம் என்ன பிரதிபலனை எதிர்பார்க்குது சீனா ...? ”

“இரண்டு துறைமுகங்களைக் கேட்குது., அதைப் பெருசா டெவலப் பண்ணி கடல்தளமா பயன்படுத்தலாம்,, அங்க வேவு பார்க்கிற டவர்களை அமைச்சா, இந்திய தகவல் தொடர்பு மொத்தத்தையும் ஒட்டுக் கேட்கலாம்.. இது தவிர குண்டூசில இருந்து கார்வரைக்கும் உற்பத்தி செஞ்சு குவிக்க தொழிற்சாலைகள் அமைச்சு இலங்கை மக்களுக்கு வேலை கொடுக்கலாம்.. இதெல்லாம் நடந்தா இலங்கை மேல காலங்காலமா இந்தியாவுக்கு இருக்கிற பிடிப்பு பலவீனமாயிடும்...” என்று பீட்டர் மாமா சொன்னார்.

“விடுதலைப் புலிகளை வளர்த்து விட்டதே இந்தியாதான்னு சிங்கள மக்களுக்கு ஏற்கனவே வெறுப்பு இருக்கு... சீனா செய்ற உதவிகளால அவங்க இன்னமும் நமக்கு எதிரா திரும்ப வாய்ப்பு இருக்கு.. அப்படி நடக்காம தடுத்தாதான் நமக்கு நல்லது...” என்று சுசி மாமி கவலைப்பட்டாள்.

“ எக்சாக்ட்லி. ஆனா அது சுலபமில்லை.. தமிழ் நாட்டுல இருக்குற எல்லா கட்சிகளும் இனிமேலாவது ஒரே மாதிரி குரல் கொடுத்து மத்திய அரசுக்கு இந்த வி­யத்துல ஆதரவு கொடுத்தாதான் சாத்தியம்..”

அன்றே சொன்னார் நேரு

ஜவஹர்லால் நேரு 1939 இல் இலங்கைப் பயணம் மேற்கொண்டார். அதன்பிறகு இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றவுடன் நேரு சொன்னவார்த்தை இதுதான்.

“ இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை ஒரு கேந்திரஸ்தானமாக உள்ளது. அந்த நாடு எதிரிபக்கம் சேர்ந்தாலும், நடுநிலை வகித்தாலும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அது அச்சுறுத்தலாகவே இருக்கும்.”


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com