Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஜனவரி 2009(15-31)

திராவிட விதை தமிழ்த்தேசிய தாவரம்
(தணிகைச்செல்வன் எழுதிய தேசியமும் மார்க்சியமும் - ஒரு கண்ணோட்டம்)
க.திருநாவுக்கரசு

ramadhas ம.பொ.சி.யின் அரசியலையும் ஈவெகி சம்பத்தின் அரசியலையும் மிகக் கச்சிதமாகத் தணிகைச் செல்வன் பின் வருமாறு கூறுகிறார்.

1. தமிழ்த் தேசியக் கருத்தைக் காங்கிரஸ் ஆதரவு பெற்ற ம.பொ.சியோ, காங்கிரஸ் எதிர்ப்பைக் கைவிட்ட சம்பத்தோ வெளியிட்ட போது - அது தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட்டது.

2. காங்கிரசின் ‘திருதராஷ்டிரத்’தழுவலால் காலாவதியாகிப் போன தேசிய சித்தாந்திகளுக்கு ஈவெகி சம்பத் ஒரு சின்ன சான்று. காஷ்மீர் ஷேக் அப்துல்லா பெரிய சான்று.

3. எதிரிகளின் மடியில் உட்கார்ந்து கொண்டு தேசியப் போரை நடத்த முடியாது என்பது எளிய உண்மை: ஆனால் மிக வலிய மெய்ம்மை. இதை அண்ணா அறிந்திருந்தார். சம்பத் அறியவில்லை.”

தணிகைச் செல்வன் நறுக்குத் தரித்தது போல் இவ்வாறு நூலில் விமர்சனம் செய்துள்ளதை நூலை வாங்கி உள்ளுணர்ந்து படித்தால்தான் வரலாற்றைத் தெளிவாகப் படிப்பவர் அறிந்து கொள்ள முடியும். அடுத்து தணிகைச் செல்வன் சி.பா. ஆதித்தனாரின் நாம் - தமிழர் இயக்கத்தைப் பற்றி க் கூறியுள்ள கருத்துகளுக்கு வருவோம். தினத்தந்தி நிறுவனர் சட்டப்பேரவைத் தலைவர், தமிழ்நாட்டு அமைச்சர் என்பவை மட்டுமே அவர் ஆளுமையின் முழுமையாகா. தமிழ் மீதும்,தமிழர் மீதும், தமிழ்நாட்டின் மீதும் அவர் கொண்டிருந்த பற்றும், அதற்காக அவர் மேற்கொண்ட அரசியல் செயல்பாடுகளுமே அவரை முழுமைப்படுத்தும் கூறுகளாகும் என்பதே நம் மதிப்பீடு”

nedumaran என சி.பா ஆதித்தனாரைப் பற்றித் தணிகைச் செல்வன் அறிமுகப்படுத்தகிறார். திமுகவில் சம்பத்தின் சர்ச்சைத் தொடங்கிய போது தமிழரசுக் கழகம் மற்றும் நாம்-தமிழர் இயக்கத்தின் தமிழ்த் தேசியப் பார்வையைப் பற்றி அதிகச் செய்திகள் ஏடுகளில் வெளிவந்தன. மேடைகளிலும் பேசப்பட்டன.ஆனால் திமுக வளர்ச்சியோடு அவ்விரு கட்சிகளையும் எதிலும் இணை காட்ட முடியாததாகவே இருந்தது. நாம்-தமிழர் இயக்கம் ஈழத்தோடு கூடிய சுதந்திரத்தமிழ்நாட்டைத் தனி நாடாகக் கோரியது. ஈழத்தோடு அவர் கோரியதைத் தணிகைச் செல்வன் பதிவு செய்யவில்லை. ஆனாலும் நாம்-தமிழர் இயக்கத்தைப் பற்றி முடிவுரையாகக், குறைந்த கால அளவே ஆயினும் அவரளவில் தமிழ்த் தேசிய அடையாள மீட்புக்கு ஆற்றிய பணிகள் அழுத்தமானவை. அவை அங்கீகரிக்கப்பட வேண்டும் என எழுதியுள்ளதை நாம் நிபந்தனை யின்றி வழிமொழிய விரும்புகின்றோம்.

நெடுமாறனின் தமிழர் தேசிய இயக்கத்தைப் பற்றித் தணிகைச் செல்வன் அறிமுகப்படுத்துகிற போது, ‘திராவிட இயக்கம் நெடுமாறனில் அன்று ஊன்றிய தமிழ் விதைதான் தமிழ்த் தேசியத் தாவரமாக இன்று வளர்ந்து விரிந்து இருக்கிறது”என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் நெடுமாறனைப் பற்றித் தணிகைச் செல்வன் கூறுகிறபோது, அண்ணாவின் செல்வாக்கை விடவும் ஈவெகி சம்பத்தின் ஆளுமைதான் நெடுமாறனிடம் விஞ்சி நின்றது என்பதை அவர் சம்பத்துடன் பிரிந்து தமிழ்த் தேசியக் கட்சிக்குச் சென்றதும், சம்பத்துடன் சேர்ந்தே காங்கிரஸ் கட்சியில் இணைந்ததும் மெய்ப்பித்தன”என்று எழுதுகிறார்.

தமிழ்த் தேசியச் சிக்கல்களின் மீதும் தமிழ்நாட்டில் எழும் பிரச்சினைகளின் மீதும் எப்படிப்பட்ட ஆழமான, நினைவாற்றலோடு கூடிய பார்வை இருந்தால் தணிகைச் செல்வன் இப்படி எழுதியிருப்பார் என்று எண்ணி நாம் பெருமை கொள்கின்றோம். மேலும் நெடுமாறனைப் பற்றிய தனிப்பட்ட ஆளுமைகளை மிக நன்றாகவே சித்திரித்துக் காட்டி இருக்கின்றார். நெடுமாறனின் மீது மிக நம்பிக்கை வைத்திருக்கும் தணிகைச் செல்வன் அவரைத் தமிழ்த் தேசியத்தின் மய்யப் புள்ளியாகப் பார்க்கின்றார்.

பா.ம.க தமிழகத்து மண் வாசனைக்கு ஏற்பப் பெரியாரியம், தமிழியம் என இரு கூறுகளை மரபணுவாகப் பெற்று இருந்தாலும், தமிழக மக்களின் நம்பிக்கையை பா.ம.க. முழுவதுமாகப் பெறவில்லை. அதற்கு நாம் பல காரணங்களை எடுத்துச் சொல்ல முடியும். தேசிய இன விடுதலை எனும் தலைப்பில், ’இந்தியா ஒரே மொழி பேசும் தேசிய இன மக்களைக் கொண்ட தனித் தேசம் அல்ல. அது பன்மொழி; பேசும் பல தேசிய இனங்களைக் கொண்ட கூட்டு நாடு. எனவே இந்தியாவின் வலிமையும் ஒற்றுமையும் இந்தப் பன்மொழித் தேசியத் தன்மைகளை அரசியல் முறையில் சமமாக அங்கீகரிப்பதில்தான் அடங்கியுள்ளது” என்று பா.ம.க பேசுகிறது. தணிகைச் செல்வன் கூறுவது போல பா.ம.க. கொள்கைத்திட்டத்தில் தேசிய விடுதலை என்ற பத்தியும், இந்தியக் கூட்டாட்சி என்ற பத்தியும் கருத்து முரண்கொண்டவையாக இருக்கின்றன” என்கிறார்.

பா.ம.க. ஆழமான கொள்கைகளைச் சொல்லி வைத்து இருக்கிறது. ஆனால் அவை நிறைவேற்றப்பட பா.ம.க பாடுபட முடியுமா? - என்கிற அய்யத்தை தணிகைச் செல்வனின் விமர்சனம் சூசகமாக எழுப்பாமல் இல்லை. பா.ம.கவைப் போலத் தனித்த அடையாளம் உடைய கட்சி - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இதுவும் எல்லாத் தமிழர்களுக்கான கட்சி இல்லை என்ற போக்கே தமிழ்நாட்டில் நிலவுகிறது. ஒருவேளை அக்கட்சி தனித்து இயங்குவதற்கான நியாயமான தேவை இருந்தால் நாம் வரவேற்கவே செய்ய வேண்டும்.

தியாகுவின் தமிழ் தமிழர் இயக்கத்தின் கொள்கைக் கட்டுமானத்திற்கு அடிப்படையாகத் திகழுவது மார்க்சியமே. தமிழ்ச் சமூக அமைப்புகள் இந்திய சமூகக் கட்டுமானத்திற்குள் அடங்கியவை யாகவே இருக்கின்றன. உண்மை தமிழியச் சாயலை வெளிப்படுத்தித் தனித் தன்மையை நிலைநாட்டும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமாகத் தியாகுவின் இயக்கம் விளங்கும் என்பதைத் தணிகைச் செல்வன் எடுத்துக் கூறி இருக்கிறார்.

தியாகுவின் அமைப்பு இருப்பது என்பதே பெரும்பாலான தமிழர்களுக்குத் தெரியாது. அறிவார்ந்த பெருமக்கள் அறிந்த அமைப்பாகவே தியாகுவின் அமைப்பு விளங்கி வருவது ஓர் அமைப்புக்குரிய பலமல்ல. நூலின் கடைசிப் பகுதியான பொதுவுடைமைத் தமிழ்த் தேசியம் எனும் தலைப்பின் கீழ்த் தணிகைச் செல்வன் தமிழ்த் தேசியப் பொதுவுடைமைக் குடி அரசின் சாரத்தை வழங்கி இருக்கிறார். முதல்கட்டமாகத் தமிழ்நாட்டுப் பொதுவுடைமை இயக்கங்களும் தேசியமும் பற்றி அலசுகிறார். அதுபோது அவர் ஓர் இடத்தில் தமிழியச் சாயல் பொதுவுடைமை இயக்கங்களில் இல்லாத நிலையை அவர்களின் தமிழ் நடையிலேயே தணிகைச் செல்வன் சுட்டிக்காட்டுவது நகைச்சுவை நிரம்பியதாய் இருக்கிறது.

ஆனால் தமிழ்த் தேசியத்தை உட்கருவாகக் கொண்ட திராவிட இயக்கத்தை பொது வுடைமையர் விமர்சனம் செய்ததைத் தணிகைச் செல்வன் தமது ஆணித்தரமான வாதங்களால் எடுத்து வைத்துள்ளார். நான்கு செய்திகளை பகுதி 7இன் முதல் அத்தியாயத்தில் அவர் தெரிவித்து இருக்கிறார். 1.ஜீவாவின் அரசியல் வளர்ச்சியின் பரிமாணங்கள்

2.உசிலை சோமநாதனின் தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சியின் தோற்றமும் உடன் மறைவும்.

3.1970களில் தோன்றிய தமிழ்நாடு கம்யூனிஸ்டுக் கட்சி.

2.தமிழ்த் தேச விடுதலையை இலக்காகக் கொண்ட ஒரு பொதுவுடைமைக் கட்சி தமிழகத்தில் முதன் முதலாகப் பிறந்த பின்னணியை எழுதியிருக்கிறார்.

அதோடு ஐந்து அமைப்புகள் கூடி முன்னணி அமைத்துப் பணியாற்றியதையும் எஸ்.வி. ராஜதுரை, குணா அதன் ஆதரவாளராக இருந்ததையும் - தமிழ்த் தேச விடுதலைப் போராட்டம் எனும் நூலிலிருந்து நமக்குத் தகவல்களைத் திரட்டித் தந்து இருக்கிறார்.

தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழ்த் தேச மார்க்சியக் கட்சி, தமிழ்நாடு மார்க்சிய, லெனியக் கட்சி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் ஆகிய கட்சிகளைப் பற்றியெல்லாம் தணிகைச் செல்வன் மிக நுணுக்கமாகவும், நுட்பமாகவும் விவாதித்து இருக்கிறார். கடைசியாக அவர் மார்க்சியமும் தமிழ்த் தேசியமும் எனத் தலைப்பிட்டு விவாதிப்பவை முக்கியமானவையாகும். இதில்தான் இந்நூலின் மொத்த சாரமே அடங்கியுள்ளது. பதிவான வரலாற்றிலிருந்து ஒவ்வொரு அம்சமாகத் துல்லியமாக நன்றாக விளங்கும்படித் தணிகைச் செல்வன் கருத்துகளை - கொள்கைகளாகத் தொகுத்துக் கூறியிருக்கிறார்.

நூல் முழுவதும் இவர் எடுத்துக் கையாண்டு இருக்கிற மேற்கோள்கள், ஆவணங்கள் இடத்திற்கு ஏற்பச் செறிவாக எடுத்து வைக்கப்பட்டுள்ளன. நூலின் செறிவுக்குத் தணிகைச் செல்வனின் கவிதை நடை மிகவும் துணை செய்கிறது. எழுத எடுத்துக் கொண்ட பொருளின் கடினம் தெரியாமல் படிப்பவரும் எளிதில் அறிந்து கொள்ளும் விதத்தில் நூலின் உள்ளடக்கம் அமைந்து இருப்பது பாராட்டுக்குரியதாகும்.

ஆசிரியர் ஒரு நூலைப் படைப்பதற்கு ஓர் உயரிய நோக்கம் இருக்க வேண்டும். அந்த உயரிய நோக்கத்தோடு இந்நூல் முடிவடைகிறது. அந்த உயரிய நோக்கம் இதுதான்:

‘இந்தியக் கட்டுமானம் இனியும் நீடிக்க முடியாது என்பதே இன்றையக் கட்டம். அம்பேத்கரின் தொலை நோக்கை மெய்ப்படுத்தும் வகையில், ஆறு கோடித் தமிழர்களும் ஓரணியில் திரண்டுப் போராளியாய் முதிர்ந்து தமிழ்த் தேச விடுதலைக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் அணியமாகுமாறு வேண்டுகிறோம்”

மொத்தத்தில் ‘தேசியமும் மார்க்சியமும்” உண்மை அரசியல் உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனிடமும் இருக்க வேண்டிய மிக உயரிய நூல்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com