Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஜனவரி 2009

சிவப்பு வெளுத்தால்
காவிதான் மிஞ்சும்


சுப.வீரபாண்டியன்

‘காங்கிரசோடு மட்டுமன்றி, காங்கிரசுடன் உறவு வைத்துள்ள கட்சிகளோடும் கூட இனிமேல் கூட்டணி இல்லை’ என்று இடதுசாரிக் கட்சிகள் திட்டவட்டமாக அறிவித்துவிட்டன. மதவாதக் கட்சிகளுக்கும் எங்கள் கூட்டணியில் இடமில்லை என்பதும் அவர்கள் மேற்கொண்டுள்ள உறுதி. ஆகவே, இந்தியா முழுவதும், காங்கிரஸ், பா.ஜ.க.வின் நிழல்கூடப் படாத கட்சிகளோடு மட்டுமே இடதுசாரிக் கட்சிகள் இணையப் போகின்றன என்பதை அவர்கள் தெளிவாக்கியுள்ளனர். அதே வேளையில், தமிழ்நாட்டில் அவர்கள் புதிதாக இப்போது ஏற்படுத்திக் கொண்டுள்ள கூட்டணி, அவர்களின் கொள்கை அறிவிப்பிற்கு ஏற்றதுதானா என்ற வினா எழுகின்றது. இந்திய அளவிலும் கூட, சில நெருடல்கள் இருக்கவே செய்கின்றன.

உத்திரப் பிரதேச சகோதரி மாயாவதியுடனும், போயஸ் தோட்ட சகோதரி ஜெயலலிதாவுடனும் அவர்களுக்கு நட்பும், நெருக்கமும் ஏற்பட்டுள்ளன.
virapandiyan பகுஜன் சமாஜ் கட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தொடங்கப்பட்ட ஒன்று. ஆனால் இன்று அக்கட்சியில், உயர் சாதியினர் என்று தங்களைச் சொல்லிக் கொள்கிற பார்ப்பனர்கள் அமைச்சரவை வரை உட்புகுந்து விட்டனர். அங்காவது பார்ப்பனர்கள் அமைச்சர்களாகத்தான் உள்ளனர். அதிமுகவிலோ, தலைமையே அவாளிடம்தான் உள்ளது. பார்ப்பனர்களின் அதிகாரம் சி.பி.எம். கட்சிக்குப் பழக்கப்பட்டதுதான். குறைந்தபட்சம், இந்தியப் பொதுவுடைமைக் கட்சிக்காவது (சி.பி.ஐ) சிறு நெருடல் தந்திருக்க வேண்டும். தரவில்லை.

‘உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு’ குறித்துத்தான் மாயாவதி கூடுதலாகக் கவலைப்படுகின்றார். அதனால்தான் ‘சங்கரமடம்’ எஸ்.வி.சேகர் அக்கட்சியில் சேர ஆசைப்படுகின்றார். ஜெயலலிதா, தா.பாண்டியன், வரதராஜன், எஸ்.வி.சேகர் என்று கூட்டணி மேடை பல வண்ணங்களில் ‘ஜொலிக்கும்’. மற்ற கூட்டணிகளில் கொள்கை உடன்பாடு உள்ளதா என்று கேட்கலாம். இல்லைதான். காங்கிரசும், விடுதலைச் சிறுத்தைகளும் ஈழம் தொடர்பான பார்வையில் வேறுபட்டுத்தான் நிற்கின்றனர். எனினும், இட ஒதுக்கீடு, சேதுக்கால்வாய்த் திட்டம் முதலான தமிழகச் சிக்கல்களில் உடன்பட்டே நிற்கின்றனர்.

அதிமுகவோ அதுபோன்ற அடிநாதமான கொள்கைகளிலும் கூட முற்றிலுமாக வேறுபடுகின்றது. குறிப்பாக, இந்தியப் பொதுவுடைமைக் கட்சிக்கும், அதிமுகவிற்கும் எந்த ஒரு கொள்கையிலும் உடன்பாடு இருப்பதாகத் தெரியவில்லை. ‘இராமர் பாலம் என்பது இனிய புராணக் கற்பனை’ என்கிறார் யெச்சூரி. ‘இராமர் பாலம் என்பதற்கான அறிவியல் சான்று எதுவும் இல்லை. அந்தப் பொய்யை முதலில் அடித்து உடைப்போம்’ என்கிறார் தா.பாண்டியன். ‘இராமர் கட்டிய பாலத்தை இடிப்பதைத் தடுக்கக் கடைசி வரை போராடுவேன்’ என்கிறார் ஜெயலலிதா.

சமூகநீதி, ஈழம், பகுத்தறிவு, இந்துத்துவம் என எல்லாவற்றிலும் இரு துருவங்களாக உள்ள இந்தியப் பொதுவுடைமைக் கட்சியும், அதிமுகவும் ஒன்றுபடுவதில் இன்னொரு ஆபத்தும் மறைந்துள்ளது. மதவாதக் கட்சிகளோடு தொடர்பில்லை என்று கூறிவிட்டு, அதிமுக வுடன் கைகோப்பதே ஒரு முரண். இந்துத்துவ, பார்ப்பனியக் கொள்கைகளை அப்படியே ஏற்றுக் கொள்கிற அதிமுக, மதவாதக் கட்சி அல்லாமல் வேறு என்ன என்பதை நமக்குத் தோழர்கள் தான் விளக்க வேண்டும். jayalaitha அது மட்டுமல்லாமல், மறைந்திருக்கும் ஆபத்து என்பது, தேர்தலுக்குப் பிந்திய கூட்டணி என்பதே ஆகும். கொள்கையளவில் பா.ஜ.க.வுடன் மிக நெருக்கமாக உள்ள அதிமுக, அக்கட்சியை நெருங்காமல், இடதுசாரிகளை நெருங்கியிருப்பது ஏன் என்று நாம் சிந்திக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு வாக்குகள் இல்லை என்பதை எல்லோரும் அறிவர். கூட்டணியில் அது வெறும் சுமை மட்டுமே. ஆனால் இடதுசாரிக் கட்சிகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு வாக்குகள் உண்டு. எனவே தேர்தலில் இடதுசாரிகளின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதும், தேர்தலுக்குப் பின் பாஜக வுக்கு ஆதரவு தெரிவித்து விடுவதும்தான் அதிமுகவின் திட்டமாக இருக்க முடியும். ஜெயலலிதாவும். சோவும் சந்தித்துப் பேசிய போது இந்த முடிவு ஏற்பட்டிருக்கக் கூடும். இதனை நம் போன்றவர்களே உணரும் போது, அரசியல் அனுபவம் மிக்க தா.பாண்டியன் போன்றவர்கள் அறியாமல் இருக்க முடியாது.

2003ஆம் ஆண்டு அரசு ஊழியர்கள் போராட்டத்தின் போதும், போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊக்க ஊதியப் பேச்சுவார்த்தையின் போதும் ஜெயலலிதா எப்படி நடந்து கொண்டார் என்பதை, பொதுமக்கள் மறந்து போகலாம், பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் மறந்து போகலாமா? அது போன்ற தொழிலாளர் விரோத, உழைக்கும் மக்கள் விரோத ஜெயலலிதாவுடன் கூட்டு வைத்துக்கொள்ளும் இடதுசாரியினர், அதன் மூலம் அத்வானிக்கும் மறைமுகமாகக் கைகொடுக்கின்றனர்.

சிவப்பு விதைகளைத் தூவியதெல்லாம், காவிப்பயிர் வளர்வதற்குத்தானா தோழர்களே?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com