Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஜனவரி 2009

மறைந்தார் ஒரு மாமனிதர்


vp_sing. நான்
விளக்கில் வீற்றிருக்கும்
அக்கினியின் கர்ப்பத்தில்
பூத்த புகையல்ல...
பூமியின் கையெழுத்தாய்
ஆகாயத்தில் பொறிக்கப்பட்ட
உண்மை உழைப்பின்
சூடான வரலாறு.
என்னுடைய ‘‘இன்று’’
சுருங்கி ஒடுங்கி
இருக்கலாம்...
ஆனால், நாளை
வரவிருக்கும்
உழைப்பின் வெற்றியால்
உயர்த்தப்படும்
புகைக்கொடி நான்.
வளமான வருங்காலத்தின்
கையப்பம் நான்.
பசித்த வயிற்றில்
நான் வளருகிறேன்.. தீக்
கண்ணீராக இல்லை...
கனலாக வெளி வருகிறேன்!
நான்
கருப்புக் கறையில்லை
காலக் கணக்கன்...!
என்னைக் கண்டு
வெள்ளை ஆடைகள்
அச்சப்படுகின்றன.

- சமூக நீதிக் காவலர், இந்தியாவின் முன்னாள் தலைமை அமைச்சர், மறைந்த வி.பி.சிங் அவர்களின் ‘ஒரு துளி பூமி! ஒரு துளி வானம்!! என்னும் கவிதைத் தொகுப்பு நூலிலிருந்து.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.