Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஜனவரி 2009

தினமலர்ப் பாம்பு



விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசினால் சிறை சென்று, களி தின்ன வேண்டியிருக்கும் என்ற அச்சத்தால் புலி ஆதரவாளர்கள் வாலைச் சுருட்டிக் கொண்டு விட்டனர் என்று தினமலர் நஞ்சு கக்கியுள்ளது. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த நானே ஒன்றரை ஆண்டுச் சிறைவாசத்தை இயல்பாக ஏற்றுக் கொண்டுவிட்டேன் என்னும் போது, திருமாவளவன் தம்பிகளா சிறை கண்டு அஞ்சுவார்கள்? களிதின்று வளர்ந்த உடம்பல்லவா அது! காட்டில், மேட்டில், வயலில், வரப்பில் அலையும் பிள்ளைகளைச் சிறையும், களியும் என்ன செய்துவிடும்? பருப்புச் சோறும், சாம்பார் சாதமும் உண்டு கொழுத்தவர்கள் வேண்டுமானால் களி தின்ன அஞ்சலாம். எங்களுக்கு அச்சமில்லை.

எங்களுக்குச் சிறை செல்வதில் ஒரு சங்கடமுமில்லை. எங்களைச் சிறைக்கு அனுப்பும் சங்கடத்தைத் தலைவர் கலைஞர் அவர்களுக்குக் கொடுத்துவிடக் கூடாது என்பதும், இன்றைய நல்ல ஆட்சிக்கு, நம் ஆட்சிக்கு நாமே இடைஞ்சலாக இருந்துவிடக்கூடாது என்பதுமே எங்கள் கவலை.


தினமலருக்கு இன்னொரு உள்நோக்கமும் இருக்கிறது. இதனைப் படித்துவிட்டு, உணர்ச்சிவயப்பட்டு நாங்கள் புலிகளை ஆதரித்துப் பேசுவோம், உடனே கலைஞருக்கு நெருக்கடி கொடுத்து எங்களைக் கைது செய்யக் கோரலாம், கைது செய்யப்பட்டுவிட்டால், ‘தமிழினத் துரோகி கருணாநிதி’ என்று பழி துற்றலாம். இப்படி, ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கத்தான் தினமலர்ப் பாம்பு ஆசைப்படுகிறது,

- 27.12.2008 அன்று, கோவையில் நடைபெற்ற புலவர் புலமைப்பித்தன் நூல் அறிமுக விழாவில் சுப.வீரபாண்டியன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.