Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஜனவரி 2009

ஈழத் தமிழருக்காய் உயிரையும் துறப்போம்


karunanithi டிசம்பர் 27ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தி.மு.கழகப் பொதுக்குழுக்கூட்டத்தில், இரண்டுசெய்திகள் குறித்துத் தலைவர் கலைஞர் உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். ஒன்று சுயமரியாதை, இன்னொன்று ஈழத்தமிழர் ஆதரவு.
குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் பதவியேற்க தி.மு.க.தலைமை முடிவுசெய்திருப்பதாக ஒரு நாளேடு பொய்ச்செய்தியை எழுதியிருந்தது. அதற்காகவே. கூட்டநேரத்திற்கு ஐந்து நிமிடம் முன்பாகவே வந்துவிடும் தான், அன்று 45 நிமிடம் தாமதமாய் வந்ததாகக் கூறியிருக்கிறார். சுயமரியாதை, பகுத்தறிவு ஆகியனவற்றில் ஒருநாளும் நாம் பின்னடைந்துவிடக்கூடாது என்பதை அன்று அவர் அழுத்தமாக வலியுறுத்தியிருக்கிறார்.


ஆசிரியர்

சுப.வீரபாண்டியன்

வெளியிடுபவர்:

கோ.தினகரன்

தொடர்புக்கு:

122/130-பி, என்.டி.ராமராவ் தெரு,
ரங்கராசபுரம்,
கோடம்பாக்கம்,
சென்னை - 600 024

சென்ற இதழ்: ஆகஸ்டு 2007, செப்டம்பர் 2007, செப்டம்பர் 2008

சுயமரியாதை இயக்கமாக இருந்த நாம் என்று இறந்த காலத்திலே முதலில் குறிப்பிட்டுவிட்டு, பிறகு இப்போதும் நாம் அப்படி இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். தமிழின உணர்வு, சமூக நீதி, பகுத்தறிவு என்பனவே திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகள். அவற்றை இழந்தால், திராவிட இயக்கத் தன்மையைக் கட்சி இழந்துவிடும் என்பதை அவர் உணர்ந்திருப்பதன் வெளிப்பாடுதான் அன்றைய பேச்சு.

ஈழம் குறித்தும் மிக உருக்கமாக அன்று அவர் உரையாற்றியிருக்கிறார். எந்த தியாகம் செய்தேனும் ஈழ மக்களுக்கு நாம் உதவ வேண்டும் என்னும் அவர் எண்ணம் வெளிப்பட்டிருக்கிறது. அவர் பேச்சின் சில வரிகள் அப்படியே கீழே தரப்படுகின்றன.
‘‘இலங்கையில் தமிழர்கள் வாழ, தக்க வழியைக் காண்போம், அந்த வழி இதுவரையிலே நாம் தேடிச் சென்ற வழி, மத்திய சர்க்காரினுடைய உதவியைக் கேட்கின்ற வழி. அது கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். கிடைக்கட்டும், கிழக்கு வெளுக்கட்டும், உதய சூரியன் உதிக்கட்டும். அதுவரையிலே அமைதியாக இருப்பதற்கு வழி இல்லாவிட்டாலும் கூட, எப்படி நம்முடைய எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வது, எப்படிஅவர்களுடைய கண்களைத் திறப்பது, எப்படி அவர்களுடைய காதுகளிலே நம்முடைய கருணை மனுவை, அதனுடைய வாசகங்களை திணிப்பது என்பதற்காக பாடுபடுவோம், பணியாற்றுவோம்.

என்னைப் பொறுத்தவரையில் நான் இன்று நேற்றல்ல, நானும், பேராசிரியரும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியையே துறந்தவர்கள். இன்றைக்கு யார் யாரோ, நாங்கள் பதவி துறப்போம், பதவி துறப்போம் என்று பேசலாம். ஆனால், நாங்கள் இரண்டு பேரும் ஏற்கெனவே பதவியைத் துறந்தவர்கள் என்பதை அவர்களுக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே, பதவி துறந்தோம், எதையும் துறப்போம், இலங்கையிலே உள்ள தமிழன் வாழ, உயிர் துறக்க வேண்டுமென்று சொன்னாலும் கூட, அதற்கம் தயாராக இருக்கிறோம் என்பதை எடுத்துச் சொல்லி, இதற்குப் பிறகாவது மத்திய அரசு மனமிரங்கி, நம்முடைய தமிழர்களைக் காப்பாற்ற முன்வரவேண்டும்’’.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com