Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
பிப்ரவரி 2009

நியாயந்தானா இது ?

சென்னை, தியாகராய நகரில், 31.01.2009 அன்று, புதிதாக உருவாகியுள்ள இலங்கைத் தமிழர் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில், ஈழத்தமிழர்களைக் காக்கவும், உடனடிப் போர் நிறுத்தம் கோரியும் அனைத்துக் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் பேசும்போது, அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது என்று கூறினார்.

காலமெல்லாம் ஈழத்தமிழர் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தும் அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்குக் கூட அழைப்பு அனுப்பியுள்ள நிலையில், திராவிட இயக்கத் தமிழர் பேரவைக்கோ, அதன் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியனுக்கோ எவ்வித அழைப்பும் அனுப்பப் படவில்லை. தொலைபேசித் தகவல் கூட இல்லை. தமிழர் கழகம், பன்னாட்டுத் தமிழ் உறவு மன்றம் போன்ற அமைப்புகளும் அழைக்கப்படவில்லை என்று, அதன் தலைவர்களான புதுக்கோட்டை பாவாணன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் ஆகியோர் தெரிவித்தனர்.

நியாயந்தானா இது ?

ஈழ ஆதரவு?

ஈழத்தமிழர் ஆதரவுச் செய்திகளை விரிவாகவும், சரியாகவும் ஒளிபரப்பி வருகின்றது மக்கள் தொலைக்காட்சி. ஆனால், பா.ம.க.வோ ஈழப் போராளி களைக் கொச்சைப்படுத்தும் காங்கிரசை உயர்த்திப் பிடிக்கிறது. பா.ம.க.வின் தலைவர் கோ.க.மணி, சட்டமன்றத்தில், “மக்கள் தொலைக்காட்சி, காங்கிரசை ஒருநாளும் தனிமைப்படுத்தாது. தமிழகக் கூட்டணிக்கே காங்கிரஸ் தலைமை ஏற்க வேண்டும் என்று கூறும் நாங்களா, காங்கிரசைத் தனிமைப்படுத்துவோம் ?” என்கிறார்.

ஈழத்திற்கும் ஆதரவு, காங்கிரசுக்கும் ஆதரவு

முத்துக்குமரன் இறுதி நிகழ்வில் கோ.க. மணி

மத்திய அமைச்சரவையில் அன்புமணி

உள் அரசியல்

ஈழ ஆதரவு எழுச்சிக்கிடையே உள் அரசியல் ஒன்று ஓடிக்கொண்டே இருக்கிறது. கலைஞரை விமர்சனம் செய்யும் சிலர், ஜெயலலிதாவைப் பற்றி மறந்தும் பேசுவதில்லை. கேட்டால், அவர் நிலை நமக்குத் தெரிந்ததுதானே என ஒரு வரியில் முடித்துவிடுகின்றனர்.

காலையில் போயஸ் தோட்டம்

மாலையில் ஈழ ஆதரவுக் கூட்டம்

அதில் பங்கேற்காதவர்களுக்குத் துரோகிப் பட்டம்.

சிறுத்தைகளும் காங்கிரசும்

தி.மு.க. கூட்டணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகளை வெளியேற்றும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது என்று அறிகிறோம். இது கூட்டணியைப் பலவீனப்படுத்தும். விடுதலைச் சிறுத்தைகளின் வாக்கு வங்கி நிலையானது, மேலும் வளரக் கூடியது. காங்கிரசின் வாக்கு வங்கியோ, நிலையற்றது, தேய்ந்து கொண்டிருப்பது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com