Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
பிப்ரவரி 2009

ஈழக் கடிதம்
குறிஞ்சி பிரபா

eelam கண்மூடி உறங்குகையில்
கண்ணிவெடிச் சத்தம்
சத்தத்தில் மரத்துப்போகும்
பிள்ளை தரும் முத்தம்
எங்கள் தெருவில் இருப்பதால்
கரம் உடைந்து நிற்கிறார்
கடவுள் கூட!

எங்கள் குழந்தைகளின்
விரல்பிடித்து நடந்ததைவிட
விழி துடைத்து நடந்த
நாட்களே அதிகம்!
நீங்கள் தமிழனென்று சொல்லித்
தலைநிமிர்ந்து நிற்பீர்கள்
நாங்கள் தமிழனென்று சொன்னால்
தலை உதிர்ந்து கிடப்போம்
பாரதி சொன்னது போல்
பாலங்கூட வேண்டாம்
வந்து நின்றால்
தருவீர்களா
ஒருகை சோறும்
உறங்க ஓர் இடமும்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.