Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
பிப்ரவரி 2009

செருப்பால் அடித்துக் கருப்பட்டி கொடுப்பதா?
இயக்குனர் பாக்கியராஜ்

bagyaraj ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற, இந்திய அரசே, சிங்கள இனவெறிப் போரை நிறுத்து என்ற முழக்கத்தை முன்வைத்து விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன், காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டபோது அங்கே வந்த திரைப்பட இயக்குனர் பாக்கியராஜ் போராட்டத்தை வாழ்த்திப் பேசினார். அவர் பேச்சிலிருந்து சில பகுதிகள்:

இங்கே நிறையத் தலைவர்கள் வந்து பேசி உள்ளனர். நான் புதிதாக ஒன்றும் சொல்லிவிட முடியாது. ஆனாலும், மக்கள் பேசிக் கொள்கிற மூன்று பழமொழிகள் அல்லது பேச்சு வழக்குகளை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

1. தூங்குகிறவனை எழுப்பலாம், தூங்குகிறமாதிரி நடிக்கிறவனை எழுப்ப முடியாது.

2. முடக்கு வாதத்திற்குக் கூட மருந்து உண்டு, பிடிவாதத்திற்கு மருந்து கிடையாது.

3.செருப்பாலடித்துவிட்டுக் கருப்பட்டி கொடுத்தால் சரியாய்ப் போய்விடுமா?

இந்த மூன்றையும் எதற்காக, யாரை நோக்கிச் சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். நாம் எவ்வளவுதான் சத்தம் போட்டாலும், போராட்டம் நடத்தினாலும், இந்திய அரசின் காதுகளில் விழவில்லை. விழவில்லையா அல்லது விழாத மாதிரி இருக்கின்றார்களா என்பதுதான் இப்போது கேள்வியாக உள்ளது. போரை நிறுத்தாமல், உதவித் தொகை வழங்குவதாகச் சொல்கிறார்கள்.

எதற்காக மத்திய அரசு இப்படி நடந்து கொள்கிறது என்று நமக்குத் தெரியும். நம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதில் நமக்கும் வருத்தம்தான். அப்போது நான் லண்டனில் இருந்தேன். இன்னொரு நிகழக்ச்சிக்காகப் பிரான்சுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில்தான் அந்தச் செய்தி எனக்குத் தெரிந்தது. மிக வருத்தத்தோடு நான்தான், சென்னையில் இருந்த என் யூனிட்டுக்கும், நண்பர்களுக்கும் போன் செய்து சொன்னேன். பெரும் கவலையோடுதான் பேசினேன்.

அது வருத்தமானதுதான். அதற்காக, ஒரு லட்சம் தமிழ் மக்களைக் கொல்வது எந்த வகையில் நியாயம்?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.