Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
டிசம்பர் 2007
சோ எங்களின் ராஜகுரு


சோ எங்களுடைய ஆதரவாளர். பாரதிய ஜனதா கட்சி நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணமுடையவர். மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் எல்லாம், ராஜகுரு என்று ஒருவர் இருப்பார். அப்படிப்பட்டவர் சோ. எந்தவிதமான அதிகாரமும் இல்லாத, மன்னரைத் தட்டிக் கேட்கும் அதிகாரம் உடையவர். ராஜகுரு தண்டிப்பது என்பது, மன்னன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக.

-இல.கணேசன் (நன்றி : நக்கீரன்.காம்)



இந்தியாவைக் கண்டிக்கும் இலங்கை அமைச்சர்

(கனடாவிலிருந்து வெளிவரும் ‘பரபரப்பு வீக்லி’ என்னும் அரசியல் வார இதழுக்கு, சிறீலங்கா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சம்பிகரணவாக அளித்துள்ள பேட்டியிலிருந்து ஒரு பகுதி)

இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்துச் சர்வதேச சமூகம் கவலைப்படும் அளவுக்கு, நீங்கள் ஏதாவது கவலைப்பட்டுள்ளீர்களா?

இந்தக் கவலைகள் எல்லாம் நகைச்சுவையாக உள்ளன. இந்திய நிதியமைச்சர், இலங்கை அரசாங்கத்திடம், பேச்சுவார்த்தை மேஜையில்தான் அமைதித் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், போர் அழிவைத்தான் கொண்டுவரும் என்றும் தெரிவித்துள்ளார். காஷ்மீர் அல்லது நாகாலாந்தில் இந்தியா என்ன செய்து கொண்டிருக்கிறது? உண்மையில், நாங்கள் இன்று சந்தித்து வரும் பிரச்சினை, இந்தியாவில் உருவாக்கப்பட்டு, வளர்த்து விடப்பட்டதாகும். அவர்கள் பாடம் கற்றுக்கொண்டுவிட்டனர். ஆனால், எங்களுடைய விவகாரத்தை இந்த அணுகுமுறையில் பார்க்கக்கூடாது என்பதை அவர்கள் கற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் எப்போதும் எங்கள் வளர்ச்சியைத் தடுக்கிறார்கள். எங்களுடைய முன்னேற்றத்தைப் பார்த்து
அவர்கள் பொறாமைப் படுகிறார்கள். எங்களு டைய சொந்தக் காலால் நாங்கள் நடக்க முடியும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.




செய்தி: தினந்தோறும் மனநோயாளிகள் என் வீட்டை நோக்கி வந்து கொண்டே இருக்கிறார்கள்
- ஜெயலலிதா

கலக்கல் கந்தசாமி : இந்த அம்மா யாரை சொல்லுதுணு தெரியலையே. எதுக்கும் கூட்டணிக் கட்சிக்காரங்க எச்சரிக்கையா இருக்கறது நல்லது.


செய்தி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை
-ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

முதல்ல சத்தியமூர்த்தி பவன்ல சட்டம் ஒழுங்கை சரி பண்ணுங்க. அப்புறம் மத்தத பார்ப்போம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.