Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
டிசம்பர் 2007
நூல் அறிமுகம்


அமெரிக்க உடன்பாடு:

அடிமைசாசனம்,
சோலை,
தணல் பதிப்பகம், 39/13, ஷேக்
தாவூத் தெரு, இராயப்பேட்டை,
சென்னை-14-அக்.2007.
ரூ,25.

காட் ஒப்பந்தமும், உலகவர்த்தக ஒப்பந்தமும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதை அறிவோம். அந்த வகையில் அமெரிக்காவுடனான அμசக்தி ஒப்பந்தம் என்னும் கொள்ளிக்கட்டையைக் கையில் எடுத்துள்ளது நடுவண் அரசு. இவ்வொப்பந்தத்தின் அபாயத்தை உணர்ந்த அணுவிஞ்ஞானிகள், இடதுசாரிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் இதனைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். இந்நிலையில், தெளிவான அரசியல் பார்வையுடனும், நாட்டு நலனில் ஆழமான அக்கறையுடனும், இந்நூலினை ஆக்கித்தந்துள்ளார் நூலாசிரியர்.

நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு நாடும், வெளிநாடுகளுடன் ஒப்பந்தம் காணமுடியாது ஆனால் இந்தியாவில் அந்த ஏற்பாடு இல்லை என்று இந்திய ஜனநாயக அமைப்பின் பலவீனத்தைச் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர். வெறும் 3 சதவீத அμமின் உற்பத்திக்காக நாட்டையே அமெரிக்காவிடம் அடிமைப்படுத்தும் அμசக்தி ஒப்பந்தத்தின் கோர முகத்தினை அனைவரும் புரிந்து கொள்ளும்படி எளிமையாக விளக்கியுள்ளார் ஆசிரியர்.

சாமான்ய மக்களின் வாழ்வை இருட்டில் தள்ளிய ஒருதலைப்பட்சமான நடுவண் அரசின் அறிக்கையும், பாராசூட் இல்லாமல் உயர உயரப் பறந்து கொண்டிருக்கும் விலைவாசி உயர்வும் அடித்தட்டு மக்களை எப்படி மோசமாக பாதித்துள்ளது, மேல்தட்டு மக்களை எப்படி மேலும் மேலும் வசதிமிக்கவர்களாக்கியுள்ளது போன்ற தலைகீழ் வளர்ச்சியை இருண்டகாலம் என்ற தலைப்பிலான கட்டுரையில் விளக்குகிறார் நூலாசிரியர்.

சிறுவியாபாரிகளின் வாழ்வை சிதறடித்த ஆன்லைன் வர்த்தகத்தின் கெடுதல்களையும், சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பதால் ஏற்படுகின்ற விளைவுகளையும், நடுவண் அரசின் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற முடிவுகளின் பாதகங்களை அடுத்தடுத்த கட்டுரைகளில் விரிவாக அலசுகிறார் ஆசிரியர்.

நடுவண் அரசின் தவறான முடிவுகளை விமர்சிக்கும் அதே வேளையில், “எல்லா பயங்கரவாதச் செயல்களையும் இஸ்லாத்தோடு இணைப்பதைக் கண்டிப்போம்” என்ற பிரதமர் பங்குகொண்ட டெல்லி மாநாட்டின் பிரகடனத்தைப் பாராட்டி வரவேற்றிருக்கிறார் நூலாசிரியர்.


காந்தியின் உடலரசியல்

ராமாநுஜம் - கருப்புப் பிரதிகள்,
பி-74, பப்பு மஸ்தான் தர்ஹா,
லாயிட்ஸ் சாலை, சென்னை-5.
செப்-2007, ரூபாய்-20/=

இந்நூல் படிப்பவர்களின் சமூக, அரசியல் பார்வைகளைத் தெளிவாக்கும் என்பதில் ஐயமில்லை. 1. சமூக அரசியல் தள... 2 பிரம்மச்சர்ய பரிசோதன அரசியல் தளத்தில், அகிம்சை, உண்ணாவிரதம் போன்ற போராட்ட வடிவங்கள், காந்தி தன்னுடைய உடலின் சாத்தியங்களைப் பற்றி முழுமையாக அறிந்திருந்ததாலேயே சாத்தியமாயின என்கிறார் ஆசிரியர். அதே நேரத்தில் அறம் சார்ந்த தளத்தில் மட்டுமே இயங்கிவந்த காந்தியின் உடல் அரசியலிலிருந்து, கோல்வால்கர், தாகூர் போன்றவர்கள் முரண்பட்டிருந்தனர் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். என்றுமே எந்தவொரு நிலைப்பாட்டை அறிவார்ந்த தளத்திற்கு அவர் எடுத்துச் செல்லவில்லை என்பதை 1934 ஜனவரியில் பீகாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைப் பற்றி காந்தி எழுதியதை வைத்துக் குறிப்பிடுகிறார். அதாவது “இந்த நிலநடுக்கம் என்பது நாம் செய்யும் பாவங்களுக்குக் குறிப்பாகத் தீண்டாமை என்னும் பாவத்திற்குத் தண்டனை” என்று எழுதுகிறார்.

தனது பிரம்மச்சாரிய பரிசோதனைக்காக, அவர் இயற்கைக்கு மாறான வாழக்கை முறையோடு கடைசிவரை போராடியிருக்கிறார் என்பதை நூலாசிரியர் தெளிவுபடுத்துகிறார். தன்னுடைய பிரம்மச்சரிய சோதனைக்காக அவர் மேற்கொண்ட செயல்கள் பல சமயங்களில் அவரைச் சிக்கலில் ஆழ்த்தி அனைவருக்கும் பதிலளிக்கக்கூடிய நிலைக்குத் தள்ளியதை அறிய முடிகிறது. காந்தியின் அறம்சார்ந்த அரசியலை ஏற்றுக் கொள்பவர்கள், பிரம்மச்சரிய பரிசோதனை முயற்சிகளை ஏற்றுக் கொள்ளவில்லை. இப்படிப்பட்ட முரண்பாடுகள் நிறைந்த காந்தியின் உடலரசியலை இரண்டுவிதமான தளங்களில் கவனமாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com