Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Thaagam
Thaagam Logo
செப்டம்பர் 2006
கட்டுரை

நீ கொன்று குவித்ததால்...
இயக்குநர் செல்வபாரதி

செஞ்சோலைக் காப்பகத்தில்
சிங்கள இராணுவம் நடத்திய
கொடூரத் தாக்குதலில் பலியான
55 உயிர்களில் ஓர் உயிர் நான்
உங்களோடு பேசுகிறேன்...
எங்களுக்காக யாரும் அழவேண்டாம்!
காரணம்
மரணம் பார்த்து மரணம் பார்த்து
வளர்ந்தவர்கள் நாங்கள்!
வீரம் பார்த்து வீரம் பார்த்து
விளைந்தவர்கள் நாங்கள்!
எங்களுக்காய் யாரும் அழவேண்டாம்...
சிங்களனின் கொடூர முகம்
இந்த மரணத்தின் மூலம்
மீண்டும் ஒரு முறை
இந்த உலகிற்கு உணர்த்தப்பட்டிருக்கிறது
மீண்டும் ஒரு உணர்ச்சி பிரவாகத்தை
உலகமெங்கும் விதைத்திருக்கிறது!
நாங்கள் புதைக்கப்படவில்லை
விதைக்கப்பட்டிருக்கிறோம்!
செஞ்சோலையில் சிறுவர்களுக்கான இல்லத்தில்
படைக்குப் பயிற்சி நடந்ததால்
குண்டு வீசியதாய்
இராணுவத் தளபதி ஒருவன் அறிவித்திருக்கிறான்!
மடையனே செஞ்சோலையில்
நாங்கள் மாணவர்கள்தான்
நீ கொன்று குவித்ததால்...
இளம் மாவீரர்கள் ஆனோம்!
எங்களுக்காக யாரும் வருத்தப்படவேண்டாம்...
என்று உங்களிடம் கேட்ட நான்
வருத்தப்படாமலில்லை!
எனக்குள்ளும் வருத்தமிருக்கிறது
ஈழம் பார்க்காமல் போகிறோமே
தேசியத் தலைவரின்
திருமுகம் பார்க்காமல் போகிறோமே
கடந்தமுறை தேசியத் தலைவர்
எங்களைப் பார்க்க வந்தபோது
அதுவே கடைசிச் சந்திப்பு என்று
எங்களுக்குத் தெரிந்திருந்தால்
கட்டிப் படித்து ஒரு முத்தம் வாங்கி இருப்போமே!
எங்களுக்குள்ளும் வருத்தம் இருக்கிறது
இருந்தாலும் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்
எங்கள் எதிரிகளே
தமிழீழத்தின் கடைசி இறப்பு
எங்களின் மரணம்தான்!
காரணம் எங்கள் தேசியத் தலைவரின்
ஆற்றலால் விரைவில் கிடைக்கும் தமிழீழம்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.