Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Thaagam
ThaagamThaagam Logo
மார்ச் 2006
கட்டுரை

சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகும் வெந்தயம்
மருத்துவர். ஏ. பிரின்ஸ்


வெந்தயக் கீரை மற்றும் விதை இதில் நாம் பயன்படுத்தும் பகுதியாகும். வெந்தயக் கீரை குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை உடையது. இது இருமல் வயிற்று உப்புசம் மற்றும் சுவையின்மையை நீக்கும்.
வெந்தய விதை என்னென்ன குணங்களையுடையது என்பதைக் கீழ்வரும் சித்தர் பாடலில் காணலாம்.

பிள்ளை கணக்காய்ச்சல் பேதசீ தக்கழிச்சல்
தொல்லைசெய்யும் மேகம் தொலையுங்காண் உள்ளபடி
வெச்சென்ற மேனி மிகவுங் குளிர்ச்சியதாம்
அச்சமிலை வெந்தயத்திற் காய்
பித்ரவுதி ரம்போகும் பேராக் கணங்களும்போம்
அத்திசுரத் தாகம் அகலுங்காண் தத்துமதி
வேக இருமலொடு வீறு கபம்தணியும்
போகமுறும் வெந்தயத்தைப் போற்று.

வெந்தய விதை பித்த சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் குறிப்பாக சர்க்கரை, குருதியழல் எனும் இரத்தக் கொதிப்பு மற்றும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் ஆகியவற்றை தீர்க்கும் அருமருந்தாகும்.

வெந்தயத்தைத் தயிரில் ஒரு நாள் ஊறவைத்து, பின் நிழலில் உலர்த்தி, நன்கு உலர்வதற்காக ஒரு நாள் வெயில் காய்ச்சலாக வைத்துப் பொடி செய்து உபயோகிக்க வேண்டும். இதில் காலை யும் மாலையும் ஒரு தேக்கரண்டி அளவு உட் கொள்ள சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்தாகும்.

வெந்தயம் ஃபேபேசி (FABACEAE) குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் குறிப்பிடத்தகுந்த அளவு புரதச் சத்து, கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. மேலும் இதில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. முக்கியமாக நார்ச்சத்துக்களில் ஒன்றான காலக்டோமேனன் (GALACTOMANNAN) அதிகமாக உள்ளது. இந்த நார்ச்சத்துக்கள் இரு வழிகளில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்துகிறது. ஒன்று, நாம் உண்ணும் உணவானது இரைப்பையிலிருந்து சிறு குடலுக்குச் செல்வதைத் தாமதப்படுத்துகிறது. இரண்டாவதாக குடலுறிஞ்சிகள் குளுக்கோசை ஏற்றுக் கொள்வதைக் குறைக்கிறது.

இது தவிரக் கல்லீரலில் சுரந்து செரிமானத்திற்குப் பயன்படும் பித்த நீரில் தேவையில்லாதவற்றை மலத்தின் வழியாக அதிகமாக வெளியேற்றுவதன் மூலமும் நியூட்ரல் ஸ்டீராய்ட் (Neutral Steroid) வெளியேற்றத்தின் மூலமும் இரத்தத்தில் தேவையற்ற LDL மற்றும் VLDLன் அளவைக் குறைக்கிறது. இந்த கொலஸ்டிராலைக் (கொழுப்பு) கட்டுக்குள் வைத்திருக்கும் பண்பினால் இருதயக் கோளாறுகள் ஏற்படுவதைப் பெருமளவில் குறைக்கிறது.

இவ்வாறு பல்வேறு நற்பண்புகளையுடைய வெந்தயம் சித்தர்களால் பன்னெடுங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதனை உரமாகப் பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் நைட்ரஜன் அளவு குறையாமல் காக்க முடியும். மேலும் எகிப்தியர்கள் பண்டைய காலங்களில் உடலினைப் பதப்படுத்துவதற்காக வெந்தயத்தை உபயோகப்படுத்தி வந்துள்ளனர்.

உங்கள் சந்தேகங்களுக்கு....
மருத்துவர் பிரின்ஸ்
98404 28 028
drprince@hotmail.com
drprince1970@yahoo.co.in


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.