Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Thaagam
ThaagamThaagam Logo
ஜூன் 2006
கவிதை

பண்பாட்டுச் சின்னத்தின் பரிதாபக் குரல்
கோவி. லெனின்


Thaagam மீண்டும் வந்தவரால்
மீண்டு வந்தேன்.

அதே இடத்தில் நிற்கின்றேன்
ஆவேசம் குறையாமல்...

சிலம்பு கையிலேந்தி
சில பொறி நெருப்பு
கண்ணிலேந்தி
அதே நிலையில் நின்றாலும்
எரிக்கப் போவதில்லை
மதுரையை!
எரிக்க முடியவில்லை
சில மனிதர்களை...

பண்பாட்டுச் சின்னமென
எனைப் பறைசாற்றி நிறுத்தினாலும்
கோவலனிடத்தில்
வாழ்ந்த நாளெல்லாம்
கொத்தடிமை!

கோட்டையிலே கோலோச்சி
வீழ்ந்த சீமாட்டிக்கு
நான் சகுனத்தடை!

கேரள மண்ணில்
இன்றும் நான் சிறைப்பதுமை!

கேவலமாய்ச் சிந்திப்பவனுக்கு
இப்போது நான் கரடிப்பொம்மை!

ஊர்ப்பெண்கள் கற்புக்கெல்லாம்
உதாரணமாய் எனைச் சொல்லாதீர்...

என் "கற்பு' காப்பதற்கே
ஆயிற்று ஐந்தாண்டு!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.