Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thaagam
ThaagamThaagam Logo
ஜூலை 2006
கட்டுரை

விண்வெளி விளையாட்டு

விளையாட்டுக்கள் பொழுதுபோக்குவதற்கு மட்டும் இல்லாமல், விளையாடும் போதே அறிவியல் கல்வியை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் இவ்விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. சதுரமான கேரம் விளையாட்டில் நான்கு மூலைகளிலும் குழி இருக்கும். இவ் விளையாட்டுப்பலகை செவ்வக வடிவில் உள்ளது. கதிரவக் குடும்பத்தின் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. நாம் வாழும் கதிரவக்குடும் பத்தின் கோள்களும், நிலவுகளும் கதிரவனில் இருந்து வெடித்து வந்ததால் நடுவில் உள்ள கதிரவன் படத்தில் ஒரு குழியும் அதன் கீழ் ஒரு வலையும் அமைக்கப்பட்டுள்ளது.

Game கதிரவன் படத்துடன் ஒரு கனமான வில்லை மற்றும் பத்து கோள்களின் படங்கள் உள்ள பத்து வில்லைகள் மற்றும் 7 கோள்களின் நிலவுகள் படம் உள்ள ஏழு வில்லைகள் என மொத்தம் 19 வில்லைகள் இருக்கும். அறிவன், வெள்ளி, புவி என வரிசைப்படி நடுக்குழியில் விழ வைக்க வேண்டும். பூமியைப் போடு, சனியை அடித்து உள்ளே போடு எனப் பேசி விளையாட வேண்டும். ஒவ்வொரு கோள் வில்லையையும் போட்டவுடன் அதன் நிலவுப் படம் உள்ள வில்லையையும் போடவேண்டும்.

நமது புவியில் உள்ள ஒரு நிலவைப்பற்றியே பாடல்களும், கதைகளும், வசனங்களும், கட்டுரைகளும் வந்து கொண்டிருக்கும் நிலைமாறி இதுவரை கண்டறியப்பட்டுள்ள 10 கோள்களைப் பற்றியும், 159 நிலவுகளைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்த இவ்விளையாட்டு உதவும்.

ஒவ்வொரு கோளும் எத்தனையாவது இடத்தில் சுற்றுகிறதோ அந்த எண்ணும், அதன் துணைக் கோள்களின் எண்ணும் அதிக மதிப்பெண்ணாகத் தரப்படும். யார் மதிப்பெண் பெறுகிறாரோ அவரே வெற்றியாளர் ஆவார்.

நம் நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும் விளையாட்டு வகுப்பில் இவ்விளையாட்டை விளையாட வைக்க அனுமதி அளித்து ஏற்பசைவு அளித்தால் மாணவ மாணவிகளுக்குக் தன்னம்பிக்கையும், பகுத்தறிவும் மேலோங்கும் என்பது திண்ணம்.

இவ்விளையாட்டை செந்தமிழ் செல்வன் (எ) செந்தமிழ்ச் சேகுவேரா உருவாக்கியுள்ளார். "இரத்தச் சரிதம்', "இன்னும் வரும்', கவிதைத் தொகுப்பு நூல்கள். சென்னை வானொலியில் உரத்த சிந்தனை, வானொலி இளைஞர் மன்றத்தின் பல்சுவை நிகழ்ச்சிகளில் 25க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு மெல்லிசைப் பாடல்கள் மற்றும் சென்னைத் தொலைக் காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

1995 எட்டாம் உலகத்தமிழ் மாநாட்டின் போது தலை நகர்த்தமிழ்ச் சங்கத்தின் சார்பிலான தமிழ் வழிக் கல்விக் கோரிக்கைப் பட்டினிப் போராட்டத்தில் கைதாகி திருச்சியில் 6 நாள் சிறையில் இருந்துள்ளார். தமிழ் வழிக்கல்விக்கான தொடர் போராட்டங்களிலும் தமிழ் செம்மொழிக்கான கோரிக்கைத் தொடர் போராட்டங்களிலும் டெல்லியில் நாடாளுமன்றம் முன் நடந்த செம்மொழி பட்டினிப் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.

மாண்புமிகு முதல் அமைச்சர், கல்வி அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் இந்தத் கோரிக்கையைப் பரிசீலித்து ஊக்கப்படுத்தினால் மாணவச் சமுதாயத்திற்கு பேருதவியாக இருக்கும். விரைவில் செந் தமிழ்ச்செல்வன் விண்வெளி விளையாட்டு கண்காட்சி ஒன்றை நடத்த உள்ளார். இக்காட்சிக்கு உதவிட தமிழர்கள் நடத்தும் நிறுவனங்கள் முன்வர வேண்டும். இந்த விளையாட்டுப் பலகைகள் தயாரித்து அளிக்க வங்கிக் கடனுதவி கிடைக்க அரசு பரிந்துரைக்க முன்வர வேண்டும்.

மேலும் தொடர்புகளுக்கு

செந்தமிழ் சேகுவேரா
20, 8ஆவது வீதி, பாரதி நகர்
கொருக்குப்பேட்டை,
சென்னை 600 021.
உலாபேசி : 92831 91977


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com