Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
அக்டோபர் 2008
நாங்கள் ஒடுக்கப்பட்டோர் ...
இரா.மே. இராமமூர்த்தி

வாழ்ந்து வருகின்றார் வளமானோர் - இந்நாட்டில்
தாழ்ந்து கிடக்கின்றோம் அடிமையாய் எந்நாளும்
எந்த உரிமையும் எமக்கில்லை - இந்நாட்டில்
எப்படி வாழ்வது எதுவும் புரியவில்லை
ஊரே எரிந்தாலும் உரிமை எமக்கில்லை
தெருவில் நடந்தாலோ மேல்சாதித் தொல்லை
எங்களோடு உறவாட தொடாதே தீட்டென்பார்
ஊரோடு களவாட போடுநீ ஓட்டென்பார்
வெற்றி பெற்றால் மாலைசூடி வலம்வருவார்
சுற்றி நின்றால் வள்லென்று மேல்விழுவார்
சுடுகாட்டு பக்கத்தில் ஒதுக்கியே வைத்தனரே!
எங்கள் கூப்பாடு உங்களுக்கு எட்டாதோ?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.