Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
அக்டோபர் 2008
முடியுமா உன்னால்...?
தமிழேந்தி

முற்றிய இனவெறி
பற்றி எரிந்திட
முண்டமாய் அரசாளும்
இராச பக்சேவே ...
முடியுமா உன்னால்?
ஒடியாத வீரத்தின்
ஒற்றை ஆண்மகன்
உலகத் தமிழன்
பிரபாகரனைப் பிடிக்க ...
முடியுமா உன்னால்?
இடியை எப்படிப்
பொட்டலம் கட்டுவாய்?
எரிமலைக் குழம்புக்கா
மடையைக் கட்டுவாய்? ...
பொடிப் பொடியாய் இற்றுப்
புதைவுற நேரும்
புரியும் அப்போதுதான்
புலிகளின் வீரம் ...
முடியுமா உன்னால்?
இரண்டக இந்தியா
காட்டிக் கொடுக்கலாம்
ஈழ விடுதலை
எழுச்சியைக் குலைக்கலாம்
மரமண்டை யோடு
வலிய மாட்டாதே
மாவீரர் புலிகள் - உன்
வாலை ஆட்டாதே ...
முடியுமா உன்னால்?

மிரட்டும் பாணியில்
எப்போதும் கதைப்பதா?
மீனவர் பிணங்கள்
கடலில் மிதப்பதா?
விரட்டி எம்மக்களை
அகதியாய்ச் சிதைப்பதா?
வீசும் எலும்புக்கு
நாய்நீ குரைப்பதா? ...
முடியுமா உன்னால்?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.