துரும்புக்கும் சிறியவர் ...
நிலவண்ணல்
என்ன தமிழர்களே
இலங்கைச் சிறுதீவு
பின்னி எடுக்கிறது
பெருந்தேசம் தவிக்கிறது!
எல்லையயன நீரின்மேல்
எதைவைத்துக் கோடிழுக்க?
வெல்லுகிற செயலறியா
வெற்றர்களா நாம், முழுக்க?
போக்கிரிக்கு இணங்கியதைப்
புரிந்துணர்வாய் அலங்கரித்துத்
தூக்கிவைத்த பெருமையின்று
துரத்தித் துரத்திச் சுடுகின்றது!
திரும்ப எடுக்கின்ற
திறன்நமக்கு இல்லையயனில்
துரும்புக்கும் சிறியவர்நாம்!
தூசுகள்நம் அண்ணன்மார்!
- நிலவண்ணல்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|