Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
நவம்பர் 2008
புலிப்பேச்சு
பாவலர் வையவன்

எண்பத்து ரெண்டுமுதல் ரெண்டாயிரத் தெட்டுவரை
என்னென்ன அரசியலின் கூத்து?-எல்லாம்
சிரிப்பாகத்தான் வருதுங்க பாத்து!
தேர்தலுக்குத் தேர்தலிங்கு புலிகள்பற்றிப் பேசுவதில்
மார்தட்டிக் கொள்ளும்தமிழ் நாடு-ஆட்சி
கிட்டும்வரை எழுதுமவர் ஏடு!
நெடுமாறன் வைகோவைப் பொடாவினிலே வைத்தவரே
கொடுக்கின்றார் புலிபற்றிப் பேச்சு-அம்மைக்கு
அப்படியோர் நிலைமைவந் தாச்சு!
ஆண்களொடு பெண்களுமாய்ப் புலியயல்லாம் களம்நின்று
மாண்டிடுவார் நாளும்போர் மூட்டம்-நம்தலைவர்
ஆடுகிறார் ஆடுபுலி ஆட்டம்!
ஆளுகின்ற சிங்களவன் தமிழர்களை மீனவரை
நாள்தோறும் கொல்கின்றான் அங்கே-கேட்பதற்கு
நாதியில்லை நேற்றுவரை இங்கே!
தமிழகத்து உறுப்பினர்தம் பதவிகளைத் துறந்துவிட்டால்
நடுவிலங்கு காங்கிரசே ஆடும்-திரைமறைவில்
போட்டுவந்த துணியவிழ்ந்து ஓடும்!
சிங்களரை மிரட்டுவதாய்ப் பம்மாத்து காட்டுவது
இங்குள்ள காங்கிரசின் மாயம்-ஒருநாளில்
வெளுத்துவிடும் நீலநரிச் சாயம்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.