Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
நவம்பர் 2008
ஒப்பாரி
அவையரசு

அய்யய்யோ தமிழ்நாட்டின் உரிமைபறி போகுதுங்க
தமிழன்னு சொல்லிக்கிட்ட காலமிப்போ மாறுதுங்க
பெரியபெரிய தலைவருங்க போட்டோவுல சிரிக்குறாங்க
பொறந்தநாளும் நினைவுநாளும் மாறிமாறிச் செய்யுறாங்க
(அய்யய்யோ

அவங்கசெஞ்ச வேலைகளை ஆருமிங்கே செய்யலிங்க
அஞ்சுவரு­ம் ஆனா அண்ணேன்னு வாறாங்க
நெஞ்சுமேல கையவச்சு வாக்குறுதி சொல்லுறாங்க
அய்யய்யோ ஓட்டுக்காகக் காலுமேல உழுவுறாங்க
(அய்யய்யோ

சினிமாத் தலைமுடிக்கும் கொடிஒண்ணு செய்யுறாங்க
அடுத்த முதலமைச்சர் அதுதான்னு சொல்லுறாங்க
பொழப்புத்தேடி வந்தவுங்க புதுத்தலைவர் ஆவுறாங்க
அய்யய்யோ தமிழனுக்கு நாதியில்ல யாருமில்ல
(அய்யய்யோ

மக்களுக்குச் சேவசெய்ய வாரோமுன்னு சொல்லுறாங்க
மக்களோட மக்களாவே வாழுறோம்னு புளுகுறாங்க
நல்ல தலைவரெங்கே நாலுபக்கம் தேடுறோங்க
அய்யய்யோ எல்லாத்துக்கும் காசுகேட்டுக் கொல்லுறாங்க
(அய்யய்யோ

லட்சரூவா காருவாணாம்; ஏ.சி. பஸ்ஸும் வாணாம்
வெலவாசி கொறஞ்சுபுட்டா ஒருவேளை சோறுபோதும்
ஒருரூவா அரிசிக்கு; மூணுரூவா கழிவறைக்கு
அய்யய்யோ எங்களுக்கு முதுகெலும்பே ஒடயுதுங்க
(அய்யய்யோ

பொற்கால ஆட்சிவாணாம் பொன்னும் மணியும் வாணாம்
மூணுவேள கஞ்சிவேணும் ஒழுகாத குடிசைவேணும்
அன்னாடப் பொழப்புக்கு நல்லகூலி வேலைவேணும்
அய்யய்யோ பொலம்புறமே ஒங்களுக்குக் கேக்கலியா
(அய்யய்யோ

தன்னலத்த மறந்துபுட்ட தகைசான்ற தலைவர்களே
எதிர்காலம் செழுமையாக்க நாமஒண்ணா சேரணுங்க
தள்ளாடி சீர்கெட்ட தமிழ்நாட்டு தலையயழுத்த
தயங்காம ஒண்ணுசேந்து தலைகீழா மாத்தணுங்க
(அய்யய்யோ


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.