Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
ஜூன் 2009
மக்களே எங்கள் மக்களே!
தமிழேந்தி

மக்களே எங்கள் மக்களே!
எத்தனை முறைதான் தோற்பீர் - அந்தோ
மக்களே எங்கள் மக்களே!

குருதி நக்கிய கையுடன் வெற்றிக்
      குலுக்கலோ எம் மக்களே - நமை
எரித்தே அழித்த இனப்பகை யோடா
      இளிப்பும் களிப்பும் மக்களே?

துரோகப் பரம்பரை நேரு பரம்பரை
      சோனியா மாற்றோ மக்களே - அவர்
தோகை மயிலா தூக்குக் கயிறா
      காலம் சொல்லும் மக்களே?

முல்லைப் பெரியாறு பாலாறு காவிரி
      மொத்தமாய் நாமம் மக்களே - நலம்
எல்லாம் கொல்லும் தில்லிக் கேநாம்
      ஏவல் நாய்களோ மக்களே!

சீக்கியன் அங்கே டைட்லர் சஜ்ஜனைச்
      செருப்பால் அடிக்கிறான் மக்களே - இங்கு
நாக்கை நீட்டி நத்திப் பிழைப்பது
      எத்தனை நாள்தான் மக்களே!

"ஒற்றை இந்தியா' "ஒன்றே சந்தை'
      ஊரை ஏய்க்கிறார் மக்களே - எவர்
கற்றை மயிரைப் பிடுங்கிக் கட்ட
      கழிசடைத் தேர்தல் மக்களே?

அம்பா னிக்கும் டாடா வுக்கும்
      அடிமைத் தேசம் மக்களே - இதில்
அத்வா னிக்கும் மன்மோக னுக்கும்
      அடியாள் வேலைதான் மக்களே!

நிலமோ உணவோ படிப்போ இல்லை
      நெருப்பில் வாழ்க்கை மக்களே - நாம்
பலப்பல தேர்தல் பார்த்தும் இன்னும்
      பாழாய்ப் போவதோ மக்களே!

"காட்"ஒப் பந்தம் அணுஉடன் பாடெலாம்
      கழுத்த றுப்புக்கே மக்களே - நாம்
காட்டவேண் டாமா யார்என் பதனைக்
       கண்திறப் பீரோ மக்களே?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.