Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan Logo
ஜனவரி 2009
நீதான்...

பாவலர் வையவன்

நறுமணம் வீசும் நல்ல
நறைசெறி பூவே; நெஞ்சில்
அறு சுவை யூட்டி அன்பால்
அமைதமிழ் நாவே; என்றும்
பொறுமையாய் என்னைக் கட்டிப்
போட்டிடும் நூலே; என்தன்
வெறுமையை விரட்டி வெற்றி
விளைத்திடும் வீரப் பெண்ணே!
தமிழரின் துயரைத் தீர்க்கத்
தடைகளாய் இருப்பவற்றை
உமிகளாய் ஊதித் தள்ள
உதவிடும் உரமே; உன்தன்
அமிழ்தினும் இனிய பேச்சோ
ஆற்றலைக் கூட்டும்; நீதான்
தமிழனாம் எனக்கு வாய்த்த
தனிப்பெருந் தலைவி; தோழி
கிளர்ந்தெழும் ஆசை நெஞ்சின்
கீழிருந் தின்பம் செய்வாய்
வளர்ந்திடும் காதல் உன்பால்
வாழ்வெலாம் களிவெள் ளந்தான்
களர்நிலம் போல இங்குக்
காய்ந்திடும் மொழிகள் தம்முன்
தளர்விலா விளைச்சல் நல்கித்
தமிழனென் மானம் காப்பாய்!
புனைந்திடும் கவியால் என்னைப்
புரிந்தவள் நீதான்; நாளும்
நினைந்திடும் என்னுள் ளத்தில்
நிறைந்தவள் நீதான்; நூலோர்
இணைந்திடும் சங்கம் கண்டு
இருந்தவள் நீதான்; நானும்
வனைந்தமண் பானை பாட்டில்
வளர்தமிழ்ப் பொங்கல் நீதான்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.