Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan Logo
ஜனவரி 2009
இறுதிவரை போராடுவேன் ஒருபோதும் எனது மண்ணைவிட்டுச் செல்லமாட்டேன்

- பிரபாகரன் விளக்கம்

ஒருபோதும் எனது மண்ணை விட்டுச் செல்லமாட்டேன் என்றும், இறுதிவரை போராடுவேன் என்றும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கூறினார். ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு மின் அஞ்சல் மூலம் பிரபாகரன் அளித்துள்ள பேட்டியை கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரி பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

உங்கள் பாதுகாப்புக்காக வெளிநாட்டுக்குச் செல்லப் போவதாக வதந்திகள் நிலவுகின்றன. உங்கள் சகாக்களை விட்டுவிட்டு செல்ல நீங்கள் முயற்சிக்கிறீர்களா?

இவை அனைத்தும் இலங்கை அரசின் ஊடகங்கள் நடத்தும் முற்றிலும் பொய்யான பிரசாரங்கள்தான். நான் ஒருபோதும் எனது மண்ணை விட்டுச் செல்ல மாட்டேன். மக்களின் உரிமைக்காக இறுதிவரைப் போராடுவேன்.

நீங்கள் நாளுக்கு நாள் வயதாகி வருகிறீர்கள். ஆனால் ஈழம் இன்னும் கைகூடவில்லையே?

எமது போராட்டம் ஒரு சுதந்தரப் போராட்டமாகும். எமது சுதந்தரப் போராட்டத்திற்குக் கால எல்லையோ, வயது எல்லையோ கிடையாது.

கிளிநொச்சியை சில தினங்களில் இராணுவம் கைப்பற்றிவிடும் என்ற கருத்து நிலவுகிறதே?

எமது போராட்ட வரலாற்றில் இதைவிட பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கைகளுக்கும், இலங்கை அரசின் பிரசாரத்திற்கும் முகம் கொடுத்துள்ளோம். நாம் யாழ்ப்பாணத்தை கைவிட்டு வன்னி பிரதேசத்திற்கு வந்தபோது எம்மால் மீண்டும் ஒருபோதும் பாரம்பரிய ராணுவமாகச் செயல்பட முடியாது என இலங்கை அரசு பெரும் பிரசாரம் மேற்கொண்டது. ஆனாலும் அதன்பின் ஓயாத அலைகள் 1, 2 மற்றும் 3 மூலம் முல்லைத் தீவு, ஆனையிறவு மற்றும் வன்னியின் பெரும்பகுதியை கைப்பற்றினோம்.

தற்போது நாம் விரைவில் கிளிநொச்சியை இழந்து விடுவோம் என இலங்கை அரசு பிரசாரம் செய்கிறது. கடந்த சிலநாள்களாக கிளிநொச்சியில் நடைபெற்ற மோதல்களில் இலங்கை ராணுவம் சந்தித்த பாரிய இழப்புகள் புலிகளின் எதிர்கால வெற்றியை வெளிப்படுத்துகிறது.

உங்களின் பயங்கரவாத செயல்பாடுகளை விரும்பாத காரணத்தால்தான் சர்வதேச சமூகம் இப்போதுக் கைவிட்டுள்ளதா?

எமது போராட்டம் நேர்மையான போராட்டம் என்று சர்வதேச சமூகம் இப்போது புரிந்துகொண்டுள்ளது. நாம் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. மக்களை இலக்காக வைத்து விமான குண்டு வீச்சுகளை மேற்கொள்ளும் இலங்கை அரசின் நவடிக்கைகள் பயங்கரவாத நடவடிக்கைள் இல்லை என்றால் மக்களைப் பாதுகாப்பதற்காகவும், அவர்களின் உரிமைகளை பெறுவதற்காகவும், மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பயங்ரவதமாகுமா? என்பதை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ளவேண்டும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலை நீங்கள் புறக்கணித்ததன் மூலம் இராஜபக்சேவை ஜனாதிபதி ஆக்கியதை பற்றி தற்போது என்ன நினைக்கிறீர்கள்? அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலரால் உங்கள் இயக்கத்திற்கு பணம் வழங்கப்பட்டதால்தான் நீங்கள் அந்தத் தேர்தலை புறக்கணித்தீர்கள் என்று கூறப்படுகிறதே?

மக்கள் தாமாகவே தேர்தலைப் புறக்கணித்தனர். இது தொடர்பாகப் பொய்யான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எமது போராட்டம் நேர்மையான போராட்டமாகும். பணம், இலஞ்சம் மற்றும் பதவி போன்றவற்றினால் அதை ஒழிக்க முடியாது.

புலிகள் பலம் இழந்துவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

நாம் பலம் இழந்துவிடவில்லை; எமது பலம் மக்கள் தான். அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற சண்டை இதற்கு பதில் அளிக்கின்றது. எமது எதிர்கால போராட்டங்கள் மூலம் எமது பலம் குறைந்துவிடவில்லை என்பது தெரியவரும். இவ்வாறு பிரபாகரன் கூறினார்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com