Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan Logo
ஜனவரி 2009
தமிழ்நாடு கூட்டுறவு இயக்கம் ஜனநாயகம் மீட்கப்பட வேண்டும்!

வி.முத்தய்யா, டி.யு.சி.எஸ்.

ஜனநாயகம் என்பது மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்திக் கொள்ளும் ஓர் ஆட்சி முறை என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி தாமஸ் ஆப்ரகாம் லிங்கன் வலியுறுத்தியுள்ளார். அரசியலில் மக்களின் கருத்தை ஜனநாயகம் எப்படிப் பிரதிபலிக்கிறதோ அதுபோல், வர்த்தகம், உற்பத்தி சேவைத் துறைகளில் கூட்டுறவு இயக்கம் என்பது உறுப்பினர்களின் கருத்துகளைப் பிரதிபலித்து, அவர்களின் நலனுக்காக அவர்களை, இயக்கும் அமைப்பு கூட்டுறவு நிறுவனங்களாகும். மானிட குலத்தின் வரலாற்றில் சற்றே ஏறத்தாழ நான்காயிரத்து அய்நூறு ஆண்டுகள் திளைத்திருந்ததாக மேலைநாட்டு அறிஞர் ஏஞ்சஸ்மேன்டிசன் (Anjusmandison) தன் ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.

ஆனால் விவசாயம், கூட்டுறவு இயக்கம், இவற்றைத் திருத்தி அமைக்காவிட்டால் மேலும் முன்னேற்றம் இல்லை என்பது இன்று உறுதியாகிவிட்டது. ஆயிரக்கணக்கான கோடீசுவரர்கள் நம்மிடையே இருந்தாலும், இன்றும் நம்மிடையே அன்றாடம் உணவிற்கும் -உடைக்கும் இன்னலுறும் ஏழைகளும் இருக்கிறார்கள். பொருளாதார மேம்பாட்டில் ஏற்படும் புதிய வருமானங்கள் தெருவில் உள்ள சாமானியர்களுக்கும் போய்ச்சேர உதவும் ஒரு சிறந்த வாகனம் கூட்டுறவு முறையாகும். அப்படிப்பட்ட கூட்டுறவுத் துறையில் இன்று ஜனநாயகம் கொஞ்சமும் இல்லை. இன்று கூட்டுறவு இயக்கம் என்பது அதிகாரிகள் வைத்ததுதான் சட்டம், இட்டதுதான் கட்டளை என்ற நிலையிலேயே உள்ளது. உதாரணமாக இந்தியாவிலேயே முதலாவதாகவும், ஆசியாவிலேயே இரண்டாவதாகவும் பெரியதாகவும் அமைந்துள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம். 1904இல் தொடங்கப்பெற்ற இச்சங்கம் இலாபகரமாக இயங்கி பல ஆண்டுகள் ஆக்கிவிட்டது.

இந்தியாவில், குறிப்பாக மக்களிடமிருந்து சிறு சிறு சேமிப்புத் தொகைகளைப் பெற்று அதன் மூலமாகத் திரட்டப்பட்டத் தொகையைக் கொண்டு ஏழை மற்றும் நடுத்தர, சாதாரண மக்களுக்கக் குறைந்த விலையில் பொருள்களை வழங்கி, பலகோடி மதிப்புள்ள சொத்துக்களை உருவாக்கியப் புரட்சிகர வரலாறு கொண்டது திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்கம் (டி.யு.சி.எஸ்.)

கூட்டுறவுச் சங்கத்தின் நிதி நிலைமைகளை சரி செய்ய நிதி ஆதாரம் வேண்டும். இதற்காக சங்கத்தின் கட்டடங்களை விற்றுவிடலாம் என முடிவு மேற்கொள்வது என்பது -விதை நெல்லை விற்கும் விவசாயி தானும் வாழமாட்டான் மக்களுக்குச் சோறும் போடமாட்டான் என்பது போலாகும். டி.யு.சி.எஸ்.க்குச் சொந்தமாக இருந்த ஏறத்தாழ 42 ஆண்டுகளில் 4 கட்டடங்களை விற்ற பின்னரும் நட்டம் குறைந்தபாடில்லை.

தமிழகம் முழுவதும் 1 கோடியே 86 இலக்கம் குடும்ப அட்டை உறுப்பினர்களுக்கு அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை மற்றும் கோதுமை போன்றவற்றைக் கூட்டுறவு இயக்கமே வழங்கி வருகிறது. தற்போது விலைவாசியைக் கட்டுப்படுத்த சிறப்புப் பொது வழங்கல் திட்டத்தின் மூலம் துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, மைதா, பாமாயில்; மற்றும் 50ரூ. மலிவு விலையில் சில மளிகைப் பொருள்கள் எனப் பொது மக்களுக்கு வழங்கி வருவதும் கூட்டுறவு அமைப்புகள் மூலம்தான்.

1901ஆம் ஆண்டு கூட்டுறவுச் சட்டம் ஏற்படுத்தப்பட்ட பொழுது அந்தச் சட்டத்தின் முன் வரையறை இந்த தமிழ் மண்ணில் இருந்துதான் உருவாக்கப்பட்டது. இவ்வாறு கூட்டுறவுத் துறையின் முன்னோடியாக விளங்கும் தமிழ்நாடு, தன்னுடைய முதல் நிலையில் இருந்து விலகாமல் இருப்பதற்கு தமிழக அர சு உடனடியாக முன் முயற்சி எடுக்கவேண்டும்.

ஜனநாயக ரீதியில் இயங்கும் கூட்டுறவு அமைப்புகள் இயல்பாகவே விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தப் பாடு படும்; விவசாயிகளிடம் நேரடியாக விளைபொருள்களைக் கொள்முதல் செய்யும். அதனால் இடைத் தரகர்கள், மொத்த வணிகம், யூக வணிகம், முதலியன நீக்கப்பட்டு விவசாயி களின் விளை பொருள்கள் பொது மக்களை வந்தடையும் தூரம் குறைக்கப்படும்; பொருளின் விற்பனை விலையும் குறையும்.

கூட்டுறவு அமைப்பின் அடித்தளமாக முதலில் உறுப்பினர்கள் சேர்க்கப்படவேண்டும்; சங்க உறுப்பிர்களின் மத்தியில் உண்மையான ஜனநாயக ரீதியான தேர்தல் நடத்தப்பட வேண்டும். அரசியல் குறுக்கீடு இல்லாமல் கூட்டுறவு சங்கம் இயங்க, அன்றாட நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து அரசு அதிகாரிகள் முற்றிலுமாக அகற்றப்படவேண்டும்.

அரசின் ஆதிக்கம் இல்லாத ஒரு சூழ்நிலையில்தான், கூட்டுறவு ஜனநாயகம் நிலைக்க முடியும். கூட்டுறவு அமைப்பு களின் நிர்வாகத்தில் குறுக்கிடவோ, தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக் காலத்தைப் பறித்திடவோ, அர சு நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலை அரசியல் சட்டத் திருத்தத்ததால் உருவாக்கப்படவேண்டும். இதனை நிறைவேற்றாதவரை கூட்டுறவு அமைப்புகள் முறைப்படி இயங்குவது வெறும் கனவாகத்தான் இருக்கும்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com