Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan Logo
ஜனவரி 2009
தமிழகக் காங்கிரசாரின் கண்கள் திறக்குமா?

குமரிச் செல்வன்

தமிழகக் காங்கிரசாரும் சில பத்திரிகையாளர்களும், “இராசிவ் காந்தி படுகொலைக்குப் பிறகுதான் இந்திய அரசு இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகச் செயல்படவில்லை'' எனக் கூறி வருகின்றனர்.

ஆனால் உண்மை நிலை என்ன?

1. 1956இல் “சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி'' என இலங்கையின் இரசியல் சட்டம் திருத்தப்பட்டது. இதனால் இலங்கையில் உள்ள தமிழர் அனைவரும் பாதிக்கப்பட்டனர். இதனை இந்திய அரசு கண்டிக்கவில்லை.

2. 1972ஆம் ஆண்டு, “புத்த மதம் இலங்கை அரசின் மதம்'' என இலங்கை அரசியல் சட்டத்தில் எழுதப்பட்டது. இந்துக் களான தமிழர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக்கப்பட்டனர். அதனையும் இந்திய அரசு - காங்கிரசு அரசு -கண்டனம் செய்யவில்லை.

3. 1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது 9 தமிழறிஞர்களை இலங்கைக் காவல்துறை சுட்டுக்கொன்றது. இதனை இந்திய அரசு கண்டித்ததில்லை.

4. 1976ஆம் ஆண்டு கச்சத் தீவினை இலங்கைக்கு இந்திய அர சு தாரைவார்த்துக் கொடுத்தது; தமிழ்நாட்டு மீனவத் தமிழரின் வாழ்வாதாரம் பறிபோயிற்று. இதனைச் செய்தது காங்கிரசு அரசு; பிரதமராயிருந்தவர் இந்திராகாந்தி!

5. 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூலகத்தினை இலங்கை இராணுவம் தீயிட்டுக் கொளுத்தியது. இதனைக்கூட இந்திய அர சு கண்டிக்கவில்லை.

(மேற்சொன்ன காலங்களில் இலங்கைத் தமிழர் ஆயுதப் போராட்டம் எதுவும் நடத்தவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பே உருவாகவில்லை.

6. 1983ஆம் ஆண்டு சிங்களர் நடத்திய இனப் படு கொலையில் பல ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டனர். அப்போதும் இந்திய அர சு கண்டனம் தெரிவிக்க வில்லை. (கவலைப்பட்டதாகக் கூறினார்கள்).

7. 1983ஆம் ஆண்டு தமிழகத் தமிழர் ஒன்றரைக் கோடிப் பேர், கையயழுத்திட்ட கோரிக்கை மனு ஒன்று அய்.நா. பொதுச் செயலாளர் அவர்களுக்கு அனுப்பப்பட்டது. மொரிசியஸ், அர்சென்டினா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இலங்கைத் தமிழர் பிரச்சனையை அய்.நா. பொது அவையில் விவாதிக்க அறிவிப்புக் கொடுத்தன. இந்திய அர சு தலையிட்டு பொது அவையில் விவாதம் வராமல் பார்த்துக்கொண்டது.

“அகதிகள் மறுவாழ்வு'' பற்றிய சிறு குழுவில் விவாதிக்க இந்தியா ஏற்பாடு செய்தது. (இதில்தான் பண்ருட்டி இராமச்சந்திரன் பேசினார்).

1985ஆம் ஆண்டு திம்புவில் நடந்த பேச்சு வார்த்தையில் ஈழத்தமிழர் அமைப்புகள் அனைத்தும் பங்கேற்றன. அவர்கள் " சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை' விட்டுக் கொடுக்க முன்வராததால் நாடு கடத்தினர். அதனைச் செய்ததும் காங்கிரசுஅரசே! இலங்கைச் சிங்கள அர சுக்குச் சாதகமாக இந்தியா செயல்பட்டது. அப்போது இராசிவ்காந்தி பிரதமர்.

9. 1986 செப்டம்பர் மாதம் இங்கிலாந்தும் 11, அய்ரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளும் அய்.நா. பொது அவையில் இலங்கைத் தமிழர் சிக்கல் பற்றி பேசின. இதில் இந்தியா பங்குகொள்ளாமல் ஒதுங்கியிருந்ததற்கு நன்றி தெரித்து அய்.நா. அவையலேயே இலங்கை அமைச்சர் அமீது பேசினார்.

10. 1987 மார்ச்சு மாதம் "அய்.நா. அவையின்' மனித உரிமைக் குழுவில், அர்சென்டினா, கனடா, நார்வே மற்றும் செனகல் ஆகிய நாடுகள் இலங்கைக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் கொண்டு ந்தன. இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இந்தியா கலந்துகொள்ளவில்லை. அப்போதும் தில்லியில் காங்கிரசு அரசுதான்; இராசிவ் காந்தியே பிரதமர்.

11. 1987ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் இராசிவ் காந்தி கொழும்பு சென்றபோது சிங்களக் கடற்படை வீரனால் தலையில் அடித்துத் தாக்கப்பட்டார். இதனைக்கூட இந்திய அர சு சார்பில் கண்டிக்கவில்லை.

12. 1987ஆம் ஆண்டு ஏற்பட்ட இலங்கை -இந்தியா ஒப்பந்தப்படி, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரே மாகாணமாக இணைக்கப்பட்டன. இராசபக்சே இலங்கையின் அதிபரானதும் அதனை தனித்தனி மாநிலங்களாகப் பிரித்துவிட்டார். நம்முடன் செய்துகொண்ட ஒப்பந்த்தத்தின் முக்கிய வீதியை மீறி இலங்கை செயல்பட்டதை இந்திய அர சு கண்டிக்கவில்லை!. தமிழகக் காங்கிரசாரும் கண்டிக்கவில்லை.

13. 2004ஆம் ஆண்டு நடந்த ஆழிப் பேரலை ( சுனாமி) தாக்குதலால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்கு மறுவாழ்வளிக்க, நார்வேட்டு உதவியால் "இலங்கை அர சு -விடுதலைப்புலிகள்' கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. இராசபக்சேஆட்சிக்கு வந்ததும் அந்த அமைப்பையே கலைத்துவிட்டார். பல்லாயிரம் தமிழர் நிவாரணமின்றித் தவித்தனர். இந்திய அரசு காங்கிரசு அரசு எந்த உதவியும் செய்யவில்லை.

14. ரடார் கருவிகள் இந்திய நலனுக்கா?

அண்மையில் தமிழக முதல்வர் கலைஞரைச் சந்திக்க சென்னைக்கு வந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்சி ஒரு செய்தியைச் சொன்னார். “இலங்கையில் இந்தியா ரடார் கருவிகளை நிறுவியிருப்பது தென் எல்லையில் இந்தியாவின் நலனைக் காக்கும் எண்ணத்தின்படிதான்'' என்றார்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com