Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
டிசம்பர் 2008
விடியல் களத்தில்...

தடா நல்லரசன்

eelam_rice வீரம் முளைத்தது
வீரம் முளைத்தது
விடியல் தெரியுது வாடா!
விட்டுக் கொடுத்திட
விட்டுக் கொடுத்திட
ஈழமண் அந்நிய நாடா?
சிந்திய குருதியும்
சிவந்த மண்ணும்
வெற்றியை மீட்கும் பாரு!
விடியல் களத்தில்
மாண்ட தோழர்கள்
ஆயிரமாயிரம் பேரு...
குண்டு வெடிக்குது
கொலையும் நடக்குது
அஞ்சுமா தமிழன் நெஞ்சம்!
மறைந்து பறந்து
அதிர்வு தருகின்ற
வான்புலியைக் கண்டு அஞ்சும்!
எதிரியின் கையில்
இருக்கும் கருவியில்
இந்திய முகமும் தெரியும்!
குண்டுகள் துளைத்து
வீழும் தமிழனின்
வேதனை யாருக்குப் புரியும்!
ஈழத் தேசத்து
எம்தமிழ்ப் பெண்கள்
எதிரிக் குதறலில் சாகும்!
ஏனென்ற கேள்வி
எழுகின்ற முன்னே
எந்தமிழனின் உயிரும் போகும்
யுத்த தர்மத்தை
நித்தம் தொடர்ந்து
புலிப்படைப் போரை நடத்தும்!
கருக்கு மழுங்கிய
குறுக்கு வழியில்
காடைகள் தமிழனை நசுக்கும்!
பேச்சுத் தெளியாப்
பிஞ்சுக் குழந்தையர்
கந்தக நெடியில் சாகும்!
கண்டும் காணா
இந்திய தேசம்
கண்ணைமூடிப் போகும்...
வீரம் சமைப்பதில்
ஆணும் பெண்ணும்
வேறல்ல இங்கே பாரு!
விடியல் களத்தில்
புலிகளைத் தவிர
வெற்றிபெறுவது யாரு?
தரணி முழுதும்
வாழும் தமிழனின்
முகவரி ஈழமாகும்!
உலகப் படந்தனில்
தமிழீழ நாடு
நிரந்தரமாகிப் போகும்...
தரைகடல் வானம்
தன்வயப் படுத்தும்
புலிகளின் புரட்சி வெல்லும்!
கொன்று குவிக்கின்ற
சிங்கள இனத்தை
உலகே காரி உமிழும்...


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.