Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
செப்டம்பர் 2008
நூல் மதிப்புரை

காபிர் பத்வா, ஊர்விலக்கம் - முஸ்லிம் உரையாடல்

கவிஞர் ஹெச்.ஜி. ரசூல் தனது ‘மைலாஞ்சி’ கவிதைத் தொகுப்பில் ‘ஏன் வாப்பா இல்லை ஒரு பெண் நபி’ என்று சிறுமி தந்தையிடம் கேள்வி கேட்கிற மாதிரி கவிதை எழுதியதற்காக தக்கலை நகர முஸ்லிம் ஜமா அத் அவருக்கு தண்டனையாக ரசூலை ஊர்விலக்கம் செய்தது. வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதினார் ரசூல். தண்ட னையை வாபஸ் பெற்றது. இப்போது ‘உயிர்மை’ இதழி ல் இஸ்லாத்தில் குடிகலாச்சாரம் குறித்து எழுதிய கட்டுரைக் காக கவிஞரை கொடூரமாக தண்டித்துள்ளது. ஊர் விலக்க மும் மதவிலக்கமும் செய்துவிட்டது.

மணச்சடங்கு, மரணச்சடங்கு மற்றும் எந்த பொது நிகழ்விலும் கலந்துகொள்ளத்தடை, மனைவியுடனும், மகள்களுடனும் பழக முடியாத தடை. வாழ்வுரிமைக் கான தடை.

நீதிமன்றம் போயிருக்கிற ரசூல். கடும் மன உளைச்ச லுக்கும் சோகத்துக்கும் உள்ளாகியுள்ள அவருக்கு தமிழ் நாடு முஸ்லிம் எழுத்தாளர் முன்னணி, தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் சங்கம், கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் இடதுசாரி எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் யாவரும் பக்கபலமாக நிற்கின்றனர்.

அநியாயமாகவும், அராஜகமாகவும், தானடித்த மூப்பாகவும், சர்வாதிகாரமாகவும் தண்டனை வழங்கி யுள்ள ஜமாஅத் அமைப்பின் செயலைக் கண்டித்து நடந்த கூட்டங்கள், எதிர்த்து எழுத்தாளர்கள் சொன்ன கருத்துக் கள், ரசூலின் தன்னிலை விளக்கங்கள், தக்கலையில் உண்மையில் என்ன நடந்தது, ஜமாஅத் செயற்குழுவுக் குள் நிகழ்ந்ததென்ன என்பது பற்றியெல்லாம் முழுமை யான விளக்கம் இந்த நூலுக்குள் இருக்கிறது.

ஜமாஅத் தலைவர் ஏ.எஸ். ஜெகபர்சாதிக் அதிமுக வைச் சேர்ந்தவர். இவர் ஜமா அத் அமைப்பின் சேமிப்பு நிதியின் மீது கண்வைக்கிறாராம். நோக்கம் நிறைவேற விடாமல் தடுக்கும் சக்தியாக ரசூல் இருக்கிறாராம்.

இதனால் வெகுண்ட ஏ.எஸ். ஜெகபர்சாதிக் அமைப் பின் அதிகாரத்தை அத்துமீறலாக பயன்படுத்தி கவிஞர் ஹெச்.ஜி.ரசூலை பழிவாங்க விரும்புகிறாராம். ‘உயிர்மை’ யில் கட்டுரை வந்த சம்பவத்தை பயன்படுத்திக் கொள் கிறார். இப்படிப்பட்ட உள்விவகாரம் பற்றிய ரகசியங்கள் நிறைய இந்த நூலில் அம்பலமாகியுள்ளன.

அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்லாமியர்களையே ‘தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், சகிப்புத் தன்மையற்ற வன்முறையாளர்கள், ஜனநாயகமற்ற முறையில் கொடிய தண்டனை தருவோர்’ என்றெல்லாம் சித்தரித்து அவ தூறுபரப்புகிற அரசியல் நோக்கத்துக்கும், இந்துத்துவ வாதிகளின் பிரச்சாரத்துக்கும் தக்கலை ஜமா அத்தின் தண்டனைமுறை பேருதவி புரிகிறது.

இந்த விவகாரத்தில் இஸ்லாமிய மாநில அமைப்பு, சாதிக் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? ரசூலை காப்பாற்ற முனைந்திருக்க வேண்டாமா? இந்த மாதிரியான கேள்விகளையெல்லாம் இந்நூல் வாசகனுக் குள் எழுப்புகிறது. மத அடிப்படைவாதம் கலை உரிமைக்கும் எழுத்துரிமைக்கும் எப்போதும் வில்லனா கவே இருந்து வந்திருக்கிற யதார்த்தத்தை இந்த நூல் உணர்த்துகிறது.

இக்ரஹ் வெளியீட்டகம், தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் முன்னணி, 199, குறிஞ்சி வீதி, தந்தை பெரியார் நகர், போரூர் சாலை, 7வது தெரு, திருவண்ணாமலை - 606 601. விலை : ரூ.50


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com