Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
செப்டம்பர் 2008
கலைக்கு எல்லைகள் ஏது?
- தாஸ்

ஓட்டல் ஒன்றின் சிற்றரங்கத்தில் ஒலித்த குரலும் தாளக் கட்டும் ஓட்டல் நடைபாதைகளில் சென்ற சிலரை உள்ளே எட்டிப்பார்க்க வைத்தது. அவர்களின் கண்கள் காதுவரை சென்று திரும்பின. இந்திய உடையில் நெற்றியில் குங்குமத்துடன் சம்மணமிட்டு கொன்னக்கோலுடன் ஒரு பெண். அவருக்கு முன்னால் சில இளமொட்டுக்கள் கைகால்களை தாளக்கட்டுக்கேற்ப அசைத்தபடி பரதநாட்டியம் கற்றுக் கொண்டிருந்தனர்.

நகரம் பெய்ஜிங். கொன்னக்கோல் முன் அமர்ந்திருந்தவர் 33 வயது நிரம்பிய சீனப் பெண் ஜின் ஷான்ஷான். அவருக்கு முன்னால் ஆடிய சீடர்களும் சீனச் சிறார்களே. பெய்ஜிங் நகரில் உள்ள இந்திய உணவு விடுதியில் வாரத்தில் இருமுறை ஜின் ஷான்ஷான் சீனக் குழந்தைகளுக்கு பரதநாட்டியம் கற்றுத்தருகிறார். இந்த வகுப்புகளில் கலந்து கொள்ளும் சீடர்களில் ஒருவர் அந்த ஓட்டலின் உரிமையாளர்!

இளம் வயதில் கண்ணாடிமுன் பரதநாட்டியம் ஆடிப்பழகினார் ஷான்ஷான். இந்திய திரைப்படங்களில் பார்த்த பரத நாட்டியக் காட்சிகள் அவரை பரதநாட்டியப் பித்தராக மாற்றியது. 1983ல் இவர் சைனீஸ் ஓரியண் டல் சாங் அண்ட் டான்ஸ் என்செம்பிள் மையத்தில் பரதநாட்டியம் கற்கத் தொடங்கி ஆறு வருடங்கள் கற்றார். வார விடுமுறையில் நாட்டியம் கற்பதற் காக ஒரு மணி நேர சைக்கிள் பயணம் செய்தார்.

பெய்ஜிங் பல்கலைக் கழகத்தில் இந்தி மற்றும் இந்தியக் கலாச்சாரத்தில் பட்டம் பெற்றார். இந்தியில் முதுகலைப் பட்டம் பெற டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் ஆனார். பிரபல இந்திய நடன வல்லுனர் ஜாங் ஜுன் பரிந்துரையில் பிரிஜ்லால் மகராஜிடம் இந்திய நடனம் கற்றார். பரதநாட்டியத்தின் மேல் அவர் கொண்ட காதல் அளப்பரியது. ஒரு அன்னிய நிறுவனத்தில் மிகப் பெரும் ஊதியம் தரும் வேலையை உதறித் தள்ளினார். 1998ல் மீண்டும் இந்தியா திரும்பிய ஷான்ஷான் கலாnக்ஷத்ரா வில் லீலா சாம்சனிடம் பரத நாட்டியம் கற்றார். அங்கு பரத நாட்டியம் கற்ற ஒரே சீனப் பெண் இவர்தான்.

அரங்கேற்றம் முடிந்தபின் சீனா திரும்பிய ஷான்ஷான் பெய்ஜிங்கில் பரதநாட்டியப் பள்ளியைத் தொடங்கினார். இந்தியக் கலை களில் சிகரமான பரதநாட்டியத்தின் நுணுக்கங் களைக் கற்றுக் கொள்வதற்காக 50 சீனப் பெண் கள் இவரிடம் சீடர்களாக உள்ளனர். இந்திய - சீன கலாச்சார இணைப்புக்கு இவருடைய கலைப் பித்து மற்றுமொரு பாலமாக அமையும். கலைகளுக்கு மொழி இல்லை என்பது மட்டு மின்றி எல்லைகளும் இல்லை.


கிரிஷ் கர்னாட்

கன்னட நாடகாசிரியரும், திரைப்பட நடிகருமான கிரிஷ் கர்னாட் யுனெஸ்கோ நடத்தும் சர்வதேச தியேட்டர் இன்ஸ்டியூட்டின் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய இலக்கியங்களை நல்ல ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர். கன்னடத்தில் அவர் எழுதிய நூல்களையும் அவரே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார்.

யுனெஸ்கோவின் இந்த சர்வதேச மன்றம் அறுபதாண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டதாகும். உலகம் முழுவதுமுள்ள நாடகம், நாட்டியம், இசையைப் பரப்பு வதும், பரிமாற்றம் செய்வதும், உலக மக்களிடையே அமைதியையும் நட்பையும் நிலை நாட்டுவதும் இம்மன்றத்தின் நோக்கமாகும்.

கிரிஷ் கர்னாட் 1992ல் பத்மபூஷன் விருதையும், 1999ல் பாரதிய ஜன்பத் விருதையும் பெற்றவர். இவருடன் இந்த சர்வதேசத் தியேட்டரில் அமெரிக்க இயக்குனர் எல் லென் ஸ்டீவர்ட், ஜெர்மனியின் நவீன டான்ஸ்மாஸ்டர் பினாபாச், பிரிட்டிஷ் இயக்குநர் பீட்டர் புரூக், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் டேரியா ஃபோ ஆகியோர் அம்பாசடர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com