Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
அக்டோபர் 2008
சந்தர்ப்பம் தராவிட்டால் எப்படி வளரும்?

“தமிழ்மொழி வளர்ச்சி அடைந்த பிறகு அதைக் கொண்டு வரலாம் என்று சொல்வது எப்படி இருக்கிறதென்றால், நீந்திப் பழகிய பிறகு தண்ணீரில் இறங்கினால் போதும் என்று சொல்வது போல் இருக்கிறது.

உலகத்தில் இப்போது எவ்வளவோ மொழிகள் இருக்கின்றன. அவை எப்படி வளர்ச்சியடைந்தன என்பதைப் பார்க்க வேண்டும். இந்தோனேஷியா இருக்கிறது. அங்கு இந்தோனிஷிய பாஷையை மக்கள் கற்றுக் கொள்ள முடியாமல் டச்சு ஏகாதிபத்தியம் தன்னுடைய பாஷையாகிய டச்சு பாஷையை வளர விட்டுக் கொண்டிருந்தது. அப்படி 1949ம் வருசம் வரையில் இருந்தார்கள். அந்த டச்சு ஏகாதிபத்தியம் போனபிறகு அவர்கள் உடனடியாக கலாசாலை, கல்லூரி முதலிய இடங்களில் தங்களுடைய பாஷையைப் புகுத்தினார்கள். இதனால் எந்தவிதமான கெடுதலும் ஏற்படவில்லை.

1600ம் வருசத்திற்கு முன்பாக ஆங்கிலம் இந்த அளவுக்கு வளர்ச்சி அடையும் என்று நினைத்திருக்க முடியுமா? முதலில் லத்தீன் பாஷையில்தான் பைபிள் இருந்தது. அந்த நிலையை ஒழிக்க வேண்டும் என்று கிளர்ச்சி ஏற்பட்டது. அதன்விளைவாக பைபிளை லத்தீன் பாஷையில் பிரசுரிப்பதை விட்டுவிட்டு ஆங்கிலத்தில் பிரசுரித்தார்கள். அதன்பிறகுதான் மக்களுடைய மொழி வளர்ச்சி அடைந்தது. அதைப்போலவே,ஒரு மொழி வளர்வதற்கு வேண்டிய சந்தர்ப்பம் கொடுக்காமலிருந்தால் அது எப்படி வளர்ச்சியடைய முடியும்?”

(அரசாங்க மொழிக் கமிசனின் கேள்வித்தாள் மீதான விவாதத்தில் பங்கு கொண்டு கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி 1955 செப்டம்பர் 29 அன்று தமிழக சட்டமன்றத்தில் பேசியது.)

வாழ்க தமிழ்!
வாழ்க தமிழ்!

“இன்று பாரதியார் சொன்ன வார்த்தைகளுடன் என்னுடைய உரையையும் சட்டசபையின் அலுவலையும் முடித்துக் கொள்கிறேன்.

பாரதியார், ‘வாழ்க செந்தமிழ்’ என்றார்; ‘வாழ்க நற்றமிழர்’ என்றார். அந்த வாழ்வு ஏதோ பிரிந்த வாழ்வு என்று அவர் கருதவில்லை. ‘வாழிய பாரத மணித் திருநாடு’ என்று சொன்னார். அப்பேர்ப்பட்ட வாழ்வு எங்கெங்கும் ஓங்க வேண்டும். வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்!” (பலத்த கரகோஷம்) என்றார் சி.சுப்பிரமணியம்.

ஸ்ரீ.பி.ராமமூர்த்தியும் மற்றும் அவருடன் சேர்ந்து எல்லா அங்கத்தினர்களும் ‘வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்!’ என்று முழங்க பலத்த ஆரவாரத்துக்கிடையே (தமிழ் ஆட்சிமொழி) மசோதா நிறைவேறியது”

(“தமிழ் ஆட்சிமொழி ஒரு வரலாற்று நோக்கு 1921 - 1956”)

- செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com