Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
நவம்பர் 2008
பேசமனம் நாணுதடி!
தமிழ்ஒளி

விட்டெறிந்த பட்டாசு விம்மி வெடித்திடவும்,
பொட்டலம்போல் மத்தாப்புப் பூப்போல் எரிந்திடவும்
தீபம் சுடர்கொண்டு, திக்கில் மினுக்கிடவும்
தீபா வளிவந்து சேர்ந்ததுகாண் இன்றைக்கு!

நீந்தும் குளிர்காற்றில் நீராட, ஆட மலர்
தீந்தேன் துளிசிதறித் தெண்ணீரை முத்தமிடும்!
முத்தமிட்ட மெல்லிதழால் மோகக் கதைசொல்ல
எட்திக்கும் செல்லுமணம் என்னைத் தழுவவரும்!

எண்ணெயிட்டு நீராட என்னை அழைக்குமலர்ப்
பெண்ணே விலகிப்போ! பேசமனம் நாணுதடீ!
நேற்றிரவு மத்தாப்பில் நீண்ட சுடர்ப்பொறிகள்
காற்றில் கலகலெனக் கைகொட்டித் தாம்நகைக்க,

சென்றேன் அதனருகில், சிந்தை அதிர்ச்சியுற
நின்றேன், ஒரு பொறிஎன் நேரில் நிமிர்ந்துரைக்கும்;
“ஐயா, வரகவியே! அண்டபகி ரண்டமெலாம்
நெய்யாய் உருக, மிக நெக்குருகப் பாடுவிரே!

‘வண்ணத் தெருவிடையே வந்த நிலவாக,
நிலவற்ற வானம் நிழலற்ற கானல்
இலகும் சுடரற்ற இல்லமிது காண், ஐயா!”
தீயிட் டெழுந்தபொறி திக்கில் தெறித்தபொறி
வாய்விட் டழுதுதுயர் வார்த்தைபல கூறிற்று:

“விண்ணில் அழகழகாய், விந்தைசெய வந்தசுடர்,
மண்ணில் கருகி மடிந்ததுபோ லாயிற்று!
விண்ணிற் கருமுகிலில் வீசுகின்ற வில்லாகக்
கண்ணில் தெரிந்தஇழை கட்டறுந்து போயிற்று!

ஆடும் தறிகளுயிர் அல்லாடிப் போயிற்று!
பாடுகின்ற பாடல், பதங்கெட்டுப் போயிற்று!
சுற்றுகின்ற ராட்டினங்கள் சுற்றும் கிராமங்கள்
அற்ற குளம்போல் அழிந்தவாழ் வாயிற்று!
தத்துகின்ற நாடா தறிகெட்ட தாயிற்று!

புத்தாடை எங்கே? புகழ்ந்தநூல் பாட்டெங்கே?
“பிசகுத் தொழில் செய்து பேதுற்றோம்!” என்றின்று
நெசவுத் தொழில் செய்தோர் நெஞ்சொடிந்து போயிற்று!
‘சா’ வென்ற ஆடை தனைப் போர்த்து நிற்கின்றார்,

‘போ’வென் றவரைநாம் போகவிட்டோம் அவ்வழியே!”
என்று துயர்மொழிகள் எத்தனையோ கூறிடவும்,
நின்றேன் நெடுநேரம், நீண்டபெரு மூச்சுவர!
விண்ணில் எரிந்தபொறி விந்தைசெய வந்தபொறி
மண்ணில் விழுந்து மனந்துடிக்க லாயிற்று!

நீந்தும் குளிர்காற்றில் நீரலைகள் பாட்டிசைக்கத்
தீந்தேன் இதழ்சிவந்து சேர்ந்தமணத் தூதனுப்பி,
எண்ணெயிட்டு நீராட என்னை அழைக்குமலர்ப்
பெண்ணே விலகிப்போ! பேசமனம் நாணுதடீ!

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com