அங்க அடையாளம்
க.பாண்டிச்செல்வி
அவளின்
நெற்றிப்பரப்பில்
தேடியாயிற்று
முகம்
முழுதும்
பார்த்தாயிற்று
தோள்பட்டை
காய்த்துப்போன
விரல்கள்
ஆராயப்பட்டது
கால்முட்டி
கட்டைவிரல்
இடப்பக்கம்
வலப்பக்கம் என
தட்டுப்படவில்லை ஏதும்
அடையாளம்
முதியோர்
பென்சனுக்காய்
வயது சான்று கேட்ட
அவளின்
கருத்த மேனியில்
கரும்புள்ளிகள்
ஏராளம்
உழைச்சு
ஓஞ்சுபோன
ஒடம்புள
கண்டிய சுருக்கங்கள்
அநேகம்
ஒட்டி
உடம்புமாய்
வற்றிய
வயிறுமாய்
அடையாளமற்றுப்போன
அவளது
வாழ்க்கையில்
எதை எழுத
அங்க அடையாளமாய்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|