Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
மார்ச் 2009
கீரைத்தமிழன் கவிதைகள்

வல்லரசு

இப்போதெல்லாம்
முகம் மலர்ந்து
நலம் விசாரிப்பதற்குள்
கடந்து போகின்றன
இயந்திர வாழ்க்கை!

பேருந்து பிடிக்கும்
அவசர கதியில்
கையசைப்புகளுடன்
ஓடிப்போகின்றன
நவீன வாழ்க்கை!

வந்தும் வருவதற்குள்
வேலைகளிருப்பதாக
விடைபெறுகின்றன
சொந்தங்களின்
பந்த வாழ்க்கை

சொற்சிக்கனத்தாலான
வார்த்தைப் பகிர்வுகளுக்குப்
பின்னால்
கணக்குப் பார்க்கிறது
விஞ்ஞான வாழ்க்கை

இதய இடைவெளிகளின்
நிரப்பிகளால்
நவீன ரோபோக்களாய்
கி.பி. 2020ல்
இந்தியா வல்லரசுதான்.

நேர மேலாண்மை

வீடு எனது
நிலம் எனது
பொன்பொருள்
மனைவி பிள்ளைகளென
எல்லாம் எனதானாலும்
நட்புகளுடான பெரும் பொழுதுகளும்
உறவுகளுடான சிறு பொழுதுகளுமாய்
கடந்து கொண்டேயிருக்கின்றன
நேரம் மட்டும்
எனதாயில்லாமல்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com