Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
பிப்ரவரி 2009
கிளிக்கு சொன்ன ஜோசியம்

நவகவி

ஜோசியன் கூட்டுக் கிளியே-ஒரு
ஜோசியம் உனக்கு சொல்கிறேன்!
இறக்கைக ளேஉன் கைகள் - அதை
பார்த்துஉன் ஜாதகம் கணிக்கிறேன்
(ஜோசியன்)

ஜோசியன் தந்த நெல்லின் - மணி
அரிசியை ருசித்தாலும்... முன்பு
பரந்த வயல்களில் கொத்திநீ கொறித்த
பதரே இதைவிட இனிப்பாகும்!

அலகால் கவ்விநீ எடுக்கும் - அந்த
சீட்டைக் காணுகையில்... அதிலுன்
சுதந்திரத் துக்கு எழுதப் பட்ட
மரண ஓலையின் சாயல்கள்!
சொன்னேன்... ஜோஸ்யம்... சொன்னது சரியா? சொல்கிளியே?
(ஜோசியன்)

அடர்ந்த கானகப் பச்சை - உன்
அங்கத்தில் தெரியவில்லை... அது
சமாதி மேலே அடித்த பச்சை
வர்ணமாய்த் தெரிகிற அவலநிலை!

ஆகா யங்களை அளந்த - உன்
சிறகுசொல் லும்சேதி... உன்
சிறகுடன் உனது வானமும் வெட்டுண்டு
கிடக்கும் கூண்டுக்குள் முடமாகி!
சொன்னேன்... ஜோஸ்யம்... சொன்னது சரியா சொல்கிளியே?
(ஜோசியன்)
அலகில் உள்ள சிவப்பு - அது
காட்டும் ஒரு குறிப்பு... அது
அடிமையாய் உனை வைத்ததால் குமறச்
சிவந்தஉன் மனதின் படப்பிடிப்பு!

ஜோசியம் கூடவிஞ் ஞானம் - எனும்
மூடப் பொய்ப்புரட்டு... பொய்யை
அக்கக் காக பிரித்தெறி யச்சொல்லும்
அக்கக் கா" எனும் உன் அழைப்பு!
சொன்னேன்... ஜோஸ்யம்... சொன்னது சரியா சொல்கிளியே...?
(ஜோஸ்யன்)

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com