Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
டிசம்பர் 2008
வரும் முன் காப்பு


நவம்பர் 12 - புத்தகமும் பேனாவும் பிடிக்கும் கைகளில் உருட்டுக் கட்டையும் கத்தியும். நாளை நீதி - நியாயம் - உரிமைகளை நிலைநாட்டும் பணியாற்றிடச் சட்டம் பயிலும் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்களுக்கிடையே பகை வளர்த்து பயங்கர வன்முறையில் இறங்கியது வெட்கக்கேடானது. படுகாயப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில்; தாக்கிய மாணவர்கள் போலீஸின் பிடியில்; கஷ்டப்பட்டு பிள்ளைகளைக் கல்லூரிக்கு அனுப்பிய பெற்றோர்கள் கண்ணீரில்.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில், சட்டக் கல்லூரி மாணவர்களிடையே சாதிய அமைப்புகளின் - சுயநலச் சக்திகளின் பகைவளர்க்கும் தலையீடுகள் இருந்துள்ளன என்பது வெளிப்பட்டுள்ளது. கல்லூரிக்குள் கனன்று கொண்டிருந்த இத்தகையச் சூழல் கல்லூரி நிர்வாகத்திற்கும் மாநில அரசின் உளவுத்துறைக்கும், காவல்துறைக்கும் தெரியாதா? காலடியில் -கண்ணெதிரில் நிகழ்ந்த பயங்கர மோதலைக் கூடத் தடுக்காமல் காவலர்கள் நெட்டை மரங்களாகச் சும்மா நின்று விட்டது ஏன்? இவை, எல்லார் மனத்திலும் இயல்பாய் எழுகின்ற கேள்விகள்.

தாக்கிய மாணவர்கள் கைது; காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்டு, பணியிடமாற்றம், நீதி விசாரணைக்கு உத்தரவு. அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் ‘வரும் முன் காப்பு’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா... வரும் முன் காப்போம் என்பது இது மாதிரியான இடங்களுக்கும் தேவை!

வன்முறை நிகழ்வைத் தொடர்ந்து மூடப்பட்டுள்ள சட்டக்கல்லூரிகள் திறக்கப்படும்போது மீண்டும் அங்கு மோதல்கள் நிகழலாம். அதனால் வரும்முன் காக்கும் நடவடிக்கையாக, அனைத்து சட்டக்கல்லூரிகளின் முதல்வர்கள், கல்வியாளர்கள், கல்லூரிகளின் மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரை மாநில அரசு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, சட்டக் கல்லூரிகளுக்குள் அமைதியான கல்விச்சூழலை உருவாக்க வேண்டும்.

அன்று தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போராடியது மாணவர் குலம். இன்று மாணவர்கள் கல்வித் தொடர்பான தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடுவது ஆரோக்கியமானது. அது அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும். சாதியால், மதத்தால் பகைவளர்த்து தங்களுக்குள் மோதிக் கொள்வது சுயநலச் சக்திகளுக்கே உதவும்.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com