Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Semmalar
Semmalar
ஆகஸ்டு 2008
புத்தகம்
- ஆங்கரை பைரவி

ஆறாம் அறிவைக்
கூர்மைப்படுத்தும்
இன்னொரு ஆயுதம்
புத்தகம்.

புத்தகம்கூட கைத்தடிதான்
தூங்குபவனைத் தட்டி எழுப்பும்
விழுந்தவனைத் தூக்கி நிறுத்தும்.

பார்வைக்கு மட்டும்
அழகாய் இருக்கும் புத்தகங்களை
பார்க்கலாம் நீங்கள் அடிக்கடி
கையேந்தி பவன்களில்.

படிக்கின்ற புத்தகத்தால்
பாடம் நடத்துவோம்
படித்த புத்தகங்கள் பல
நமக்குப் பாடம் நடத்தும்.

சில புத்தகங்கள்
நம்மை அசைத்துப் பார்க்கும்
புரட்டிப் போடும்.
அலைக்கழிக்கும்.
முகம் சுளிக்க வைக்கும்.

சில வேளைகளில்
புத்தகங்களுக்கும் ஒரு
வழிப்பாதைதான்
இரவல் போனால்
திரும்புவதில்லை.

எல்லாப் புத்தகங்களையும்
மனிதன் வாய்விட்டு
வாசிக்கிறான்.

மனிதன் என்ற புத்தகத்தை
காலம் வாசிக்கிறது
கடைசி பக்கத்தை மட்டும்
மிகவும் ரகசியமாய்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
கிரிஜா மணாளன்
2008-09-08 06:41:00
girijamanaalan2006@yahoo.co.in

எங்கள் படைப்பாளர் அமைப்பின் சிறந்த கவிஞரரான நண்பர் ஆங்கரை பைரவியின் இந்த "புத்தகம்' கவிதை பலராலும் பாராட்டுப்பெற்றது. அதை "கீற்று" த் தளமும் பெருமைப்படுத்தியதற்கு எனது நன்றி.

- கிரிஜா மணாளன்
செயலாளர்/திருச்சி மாவட்டக்க்கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP