Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஏப்ரல் 2009
2வது மகளிர் திரைப்படவிழா

இந்திய திரைப்படவிழா இயக்குநரகம், தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் இந்தியா, இந்திய தேசிய திரைப்ட ஆவணக் காப்பகம் மற்றும் சென்னை சத்யம் சினிமாஸ் ஆகியவை இணைந்து வழங்கிய 2வது மகளிர் திரைப்படவிழா, 2009 மார்ச் 1ஆம்தேதி மாலை சத்யம் வளாகத்தில் ‘Six degrees’

தியேட்டரில் கோலாகலமாகத் துவங்கியது.

இந்தோ - கொரியன் சென்டர் இயக்குனர் ரதி ஜாபர் என்எப்டிசி ரீஜனல் மானேஜர் பி.பி.மத், இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பத்தின் இயக்குனர் விஜய் ஜாதவ், பிரபல திரைப்பட நடிகை ஷப்னா ஆஸ்மி, மகளிர் திரைப்பட விழா அமைப்பாளர் வசந்தி சங்கரநாராயணன் ஆகியோர் இந்த மகளிர் திரைப்பட விழாவின் ஆரம்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவின் முக்கிய அம்சங்கள் குறித்துப் பேசினார்கள்.

முதல்நாள் திரைப்படமாக கௌதம் கோஷ் இயக்கிய 'பார்' இந்திப்படம் திரையிடப்பட்டது. நஸ்ருதீன்ஷா, ஷப்னா ஆஸ்மி சிறப்பாக நடித்திருந்த இப்படம் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களால் மிகவும் பாராட்டப்பட்டது.

முதலாவது மகளிர் திரைப்பட விழாவைவிட இந்த 2வது திரைப்படவிழாவில் அதிக அளவில் குறும்படங்களும், ஆவணப் படங்களும் சர்வதேச மற்றும் இந்திய அளவில் திரையிடப்பட்டன.

முதல் திரைப்பட விழாவில் ஒரு படத்தைத் தவிர மீதி எல்லா திரைப்படங்களும் பெண் இயக்குனர்களே இயக்கிய திரைப்படங்கள். ஆனால், இம்முறை இத்திரைப்படவிழாவில் பெரும்பாலான படங்கள் பெண் இயக்குனர்கள் இயக்கியிருந்தாலும், பல ஆண் இயக்குனர்கள் இயக்கிய படங்களும், இருந்தன. அவை பெண்களைக் குறித்த பார்வையுடையதாக இருந்ததால் திரையிடப்பட்டன.

இந்தியப் படங்கள் 52, கொரியன் படங்கள் 34 மற்றும் உலக நாடுகளைச் சேர்ந்த படங்கள் 50 என எல்லாம் சேர்ந்து மொத்தம் 136 படங்கள் (முழு நீளத்திரைப்படங்கள், குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள்) இவ்விழாவில் மார்ச் 1 முதல் 8ம்தேதி முடிய திரையிடப்பட்டன.

இந்திய இயக்குநர்களில் சத்யஜித்ரேயின் சாருலதா, ரித்விக் கடக்கின் அபர்ணரேகா, சுப்பிணரேகா, சித்தானந்த தாஸ்குப்தாவின் அமோதினி, சையத் அக்தர்மிஸ்ராவின் நஸீம். மிருணாள் சென்னின் அகாலே சாந்தனே, ஷியாம் பெனகலின் பூமிகா, ஜப்பார்படேலின் உம்பரத்தா, கஜேந்திர அகிரேவின் குல்மோகர் கன்னட இயக்குனர் கவிதா லங்கோதின் அவ்வா, மலையாள இயக்குனர் ஜான் ஆபிரகாமின் அம்மா அறியான், ரோஹினியின் ‘Silent Hues’ இப்படி நிறைய முக்கியமான படங்கள் திரையிடப்பட்டன. சில படங்கள் திரையிடப்பட்டபோது அவற்றின் இயக்குநர்களும் கலந்து கொண்டு படத்தின் முடிவில் பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தது சுவாரசியமாக இருந்தது.

தேதன் மேஹ்தாவின் மிர்ச் சோலா திரையிடப்பட்ட போது அரங்கில் கூட்டம் நிரம்பி வழிந்தது. படத்தின் முடிவில் அரங்கமே எழுந்து கைதட்டிப் பாராட்டியது. அவரும் சளைக்காமல் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

உலக சினிமா பிரிவில் மஜுவெய்ஸ் இயக்கிய ‘Installation of Love’ என்ற படம் மிக அருமையான ஒளிப்பதிவுடன் முத்தக்காட்சி மற்றும் செக்ஸ் படுக்கைக்காட்சிகள் விரசமின்றி கதைக்குத் தேவையான அளவில் இடம் பெற்று அரங்கில் நிறைந்திருந்த ஏராளமான பெண் பார்வையாளர்களாலும் பாராட்டப்பட்டது.

ஈரானியப் படங்கள் பூரண் தெரக் ஷந்தே இயக்கிய Candle in The Wind மற்றும் கெய்வான் அலி மொஹம்மதி இயக்கிய சூடிஉவரசயட ஆகிய இரண்டு படங்களும் வித்தியாசமான கதை அமைப்புடன் அனைவரையும் கவர்ந்தன.

‘Keep the Dance Alive’ என்ற நமீபிய பழங்குடி மக்களின் நடனம் பற்றிய ஆவணப்படம் ரசிகர்களைக் கவர்ந்தது. மார்புகளை மறைக்கும் வழக்கம் இன்னும் நமீபியாவில் வழக்கமில்லை என்பது நடனத்தைப் பார்க்கும் போது தெரிந்தது.

இந்திய பெண் இயக்குனர் சௌதாமியின் ஆவணப்படங்கள் தென் இந்திய வர்த்தக சபை அரங்கில் திரையிடப்பட்டன. சத்யம் தியேட்டர், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தியேட்டர் இரண்டிலும் தினசரி சராசரி 8 படங்கள் 7 நாட்களும் திரையிடப்பட்டன. ஆகவே, எல்லாப்படங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்தியப்பெண் இயக்குனர் பிஷக்காதத்தா இயக்கிய ‘In the Flesh’ ஆவணப்படம். மூன்று பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதை சித்தரிக்கும்படம். தென் இந்திய வர்த்தக சபை தியேட்டரில் பார்த்தேன். மிகவும் சுமாரான படம். சரியான சித்தரிப்பு இல்லை. ஒருபெண் அலியைப்போல இருந்தார்.

அவர்களது வாழ்க்கைப் பிரச்சனைகளும் சரியான முறையில் சித்தரிக்கப்படவில்லை.

அதே போல் ‘Out’ என்ற Feminist Video Activism கொரியப்படமும் சரியான முறையில் பிரச்சனையைச் சொல்லவில்லை. காட்சிகள் ஒரே மாதிரி இரண்டு பேர்களின் பேச்சை மட்டுமே ஒரு மணி நேரம் காட்டி, மத்தியானம் வெயிலுக்குப்பயந்துசத்யம் தியேட்டர் ஹஊயில்உட்கார்ந்திருந்தவர்களை, பயமுறுத்தி, வெளியே ஓடிவிடலாமா என்று எண்ணவைத்த படம். சரியான அறுவை என எல்லோரும் திட்டினார்கள்.

பெரும்பாலான படங்கள் சரியான முறையில் இத்திரைப்படவிழாவிற்கு தேர்வுக்குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

ஆக்னஸ் வர்தா போன்ற பிரபலமான சில இயக்குநர்களின் ஆவணப்படங்கள் இடம் பெற்றிருந்தாலும், நிறைய பெண் இயக்குனர்களின் படங்கள், பெண்களின் பிரச்சனையை இன்னும் வலிமையாகச் சொல்கிற இந்திய, வெளிநாட்டுப் படங்களைப் பொறுமையுடன் கொஞ்சம் முன்னதாகவே தெளிவாகப் பார்த்துத் தேர்ந்தெடுத்து திரையிட்டிருக்கலாம் என்பதைத் தேர்வுக்குழுவினருக்கு நான் சொல்ல விரும்புகிறேன்.

முதல் மகளிர் திரைப்படவிழா போல 2வது திரைப்படவிழா சிறப்பாக அமையவில்லை என்பதே என்னைப்போல விழாவிற்கு வந்தவர்களின் கருத்து.

அடுத்த வருட விழா சிறப்பாக அமைய அமைப்பாளர்கள் ஆவன செய்வார்களாக.

-இரா.கதைப்பித்தன்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com