Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Semmalar
Semmalar
ஏப்ரல் 2009
கணக்கு

- சி.விநாயகமூர்த்தி

எழுத்தறியாத பாட்டி
வீட்டுச் சுவரில்
கோடு கோடாய்ப் போடுகிறாள்,
அது அவள் மட்டும் அறியும் கணக்கு.

ஆப்பம் விற்கும் ஆயா,
வாடிக்கையாளர் வரவு செலவை
பிழையில்லாமல் பதிவு செய்கிறாள்
மனக் கணக்கில்.

கூட்டிப் பெருக்கி
வீட்டை சுத்தப்படுத்தும் அம்மா
கூட்டிப் பெருக்கி கணக்குப் பார்க்க
கை விரல்களை மடக்குகிறாள்.

வீட்டுக்கணக்கை
மாணவன் தப்பாய் எழுதினால்
அடிகள் விழுகின்றன
அவன் முதுகில்.

ஏட்டுக் கணக்கை
முதலாளி தப்பாய் எழுதினால்
அடிகள் விழுகின்றன
கூலி குறைந்த தொழிலாளி வயிற்றில்.

குறைவைக் கூடுதலாய்க் காட்டும்
ரேசன் கடை தராசு.
கூடுதலைக் குறைத்துக் காட்டும்
கறுப்பு வணிகர் கணக்கு.

கோடிக் கணக்கில் சலுகைகள்
காகித வயலில் அரசு விதைத்தும்
உழவன் கணக்கில்
உழக்கும் மிச்சமில்லை.

வேதனையை வெளிப்படுத்தினால்
விதியின் கணக்கென்று
வேறுபுறம் திசை திருப்புகிறார்கள்.

இதய வங்கியின் சேமிப்புக் கணக்கில்
கோபத்தைக் குவித்தால் போதாது.
தேர்தல் கணக்கை
தெளிவாக எழுதினால்தான்
எல்லாம் நேராகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
V.SETHURAMAN
2009-05-04 06:58:00
www.sethuramanlanga@yahoo.com

pukinra malaruku antha orunal matum maranam
priginra natpuku notiku notiku maranam



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP