Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Semmalar
Semmalar
ஏப்ரல் 2009
சாரதி கவிதைகள்

வரிகளின் ஊடே
புத்தகம் மறைந்து
மறைந்து கேட்கிறது
உண்மையின் தூரத்தில்
உனக்கும் எனக்கும்
தீராத நேசம்.

********

ஜன்னலுக்குப் பின்
ஒரு சிட்டுக்குருவி
சட்டெனப் பறந்து
அர்த்தம் சொன்னது
காற்றின் வரவு பற்றி


********


கருந்தீ....


கக்கிய இருள்
வரைபடமாய்
கசிந்து உருகுகிறது
பூமிமேல்.
சாவின் அதிர்வு
வாழ்வின் துடிப்பில்
பத்திரப்படுத்திக் கொள்
இருப்பின் கேள்வியை.


*******


எனினும் இந்த வாழ்க்கை
நம்பிக்கை யளிக்கிறது.

அம்மாவின் அன்பு நெருடினாலும்
அப்பாவின் ஆதரவு தளர்ந்தாலும்
அண்ணனின் விரல் நுனி பிடிக்க மறுத்தாலும்
தங்கையின் பாசம் பறிபோன போதும்
கடவுளே சொல்ல வார்த்தையற்றாலும்
மாறாது
அன்று ஜனித்த அந்தக் குழந்தையின்
அற்புத சிரிப்பில்
இயற்கையின் முதல் பிரகடனம்.
எனினும் இந்த வாழ்க்கை
நம்பிக்கை யளிக்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.