Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Semmalar
Semmalar
ஏப்ரல் 2009
சென்செக்ஸ் புதைகுழிகள்
இரா.தெ.முத்து

மக்களை அன்னியமாக்கும்
கட்டமைப்பு எதுவானாலும்
நொறுங்கியே தீரும்
கனவு தேசத்தின் சரிவு
சொல்லும் செய்தி.

நிதி மூலதன
வேட்டைக்காரர்களும்
பிரைவேட் செக்டர்
அபிமானிகளும்
தங்கள் பொருளாதார உரையாடலையும்
உரையாடலின் தத்துவத்தையும்
எவர் மீதாவது சுமத்தி
மீட்சிக்கு
எதையும் செய்து கொள்ளலாம்.

சென்செக்ஸ் புள்ளிகளில்
புதைந்து கிடந்து
டாலரையும் ஸ்டெர்லிங்கையும்
புணரத்துடிக்கும் பெருவிருப்பில்
சத்தியப் போலிகள்
பாவச் சந்தையில்
பெருமுதலீடாக்கி
கட்டுதல் அற்ற
நீதி தேவதை திருஉரு முன்பு

அரசு எந்திரம்
ஊடக வலைகளை ஊடறுத்து
தாம் ஆடும் ஆட்டத்திற்கு
திரைமறைவு அங்கீகாரத்தோடு
தகிடுதத்தம் செய்து கொள்ளலாம்.

வால் ஸ்ட்ரீட் தொடங்கி
தலால் ஸ்ட்ரீட் வரை
லேமன் பிரதர்ஸ்
சத்யம் மாடல் மோசடிகளுக்காக
எந்தக் கூச்சமும்
அடைவதில்லை இவர்கள்.

அறம் பொருள்
மானம் மரியாதை
காதல் பாசம்
எது குறித்தும்
எவர் உணர்ச்சிகளையும்
உணராமல்
டாலர் மோக வெறிகொண்டு
தாவிப்பாயும் திருட்டுக் காளைகள்
தேசத்தின் சுதந்திரத்தையோ
சுதந்திரத்தின் அர்த்தத்தையோ
என்றும் மதிப்பதில்லை.

தன்னளவில் கரன்சிகள் ஒருபோதும்
உற்பத்தி சூல் தரிப்பதில்லை
உழைப்பால் மட்டுமே
மூலதனமென்ற முகவரி பெறும்
கொள்ளையைப் பங்கீடு செய்யும்
சந்தைக்கு மாற்றாக
உழைப்பை திறமையை
பங்கீடு செய்கிற சந்தைக்காக
புவிமேல் நடத்து
போரை நடத்து.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.