Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Semmalar
Semmalar
ஏப்ரல் 2009
காலம்
களப்பிரன்

தூங்கவைக்கும் அவதியும் அசதியும்
சில காலமாய்
துயிலெழுப்பும் கடிகாரங்களாகிப் போயின
தத்துவமும் அரசியலும் நிரம்பி வழியும்
எனது நூலக அலமாரியின் இடுக்குகளிலிருந்து
ஒருசில கவிதையும், இலக்கியமும் மட்டுமே
இப்போதெல்லாம் எகிறிக் குதிக்கின்றன
போக்குவரத்து நெரிசல் மிகுந்த
என் வேலை முறையோ
கொஞ்சநாளாய்
பயணிக்கவே அனுமதி கேட்டு
காத்து நிற்கின்றது
மணிக்கணக்கில் பேசிப்பறக்கும்
என் மனமோ
சில நிமிடங்களைக் கூட கடத்தத் தெரியாமல்
சிறைப்பட்டுப் போகின்றது
சாதாரணச் சொற்களைக் கூட
கோர்த்துக் கொடுப்பது நீயானால்
பலவிதமாய் அர்த்தப்படுத்தும்
அகராதியாய் நான் உருமாறுவதோடு
என் இயல்பும் சமன் குலைந்து போகிறது
சில நேரங்களில் அந்த
அகராதியின் அத்துமீறல்களோ
பதில்களற்ற உன்னுடைய
மௌனத்துக்குள்ளும்
ஊடுருவி என்னை உருக்குலைக்கிறது
இத்தனை விதமான கொடுமைகளால்
எல்லா நாளையும் உருமாற்றி
நீயே தான்
என் முன்னே அமர்ந்திருக்கிறாய்
இறுதித் தீர்ப்புச் சொல்லும்
நீதி தேவதையாகவும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.