Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Semmalar
Semmalar
ஏப்ரல் 2009
ஜனநேசன் கவிதைகள்

விசாரிப்பூ

விழுந்த வலியை விட
விசாரிப்பின் ரணம் அதிகம்
யோசித்துப் பார்க்கிறேன்.
ஒருவேளை யாரும் விசாரிக்காமல் இருந்திருப்பின்
தனிமையில் சிதைந்திருப்பேன்


கடித்த காட்சி

சேரிச் சிறுமிகள் இருவர்
ஒரு பருப்பு வடையை பிய்த்து
தின்னத் தின்ன
உதிரும் உணவுக் கழிவுகளை
களிப்போடுக் கவ்வி
விரையும் எறும்புகள்!

மிளகாய்க் கடித்த பாவனையில்
நீர் மொண்டு மொண்டு
வயிறு நிரப்பி
வடைக்காரியிடம் காசு கொடுத்து
குப்பைச் சாக்கை முதுகில் போட்டு நகர்கிறார்கள்
பெரிய வீட்டுக் கழிவுகளை பொறுக்க...!
சுருக்கென்று இதயத்தைக்
கடித்தது அறிவு!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.