Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Semmalar
Semmalar
ஏப்ரல் 2009
மலைவிழுங்கிகள்

- ஜனநேசன்

ஒரு கோடை மாலையில்
இந்த வழி பயணிக்கையில்
அந்த வழுக்குப் பாறை மலைமேல்
வட்டக்கருப்பட்டியில் ஈமொய்த்தது போல்
சிறுவர்கள் விளையாடினர்
மலையின் கிழக்குப் புறத்து
நஞ்சையெலாம் விளைந்து குலுங்கியது!

மற்றொருமுறை வரும்போது
கிரானைட் கேக்குகளாக வெட்டப்பட்ட
மலை சுமந்து லாரிகள்
கட்டெறும்புகளாக ஊர்ந்திருந்தன....

இன்று பார்க்கிறேன்.
மலையிருந்த இடத்தில்
விரிந்தாழ்ந்த பள்ளம்
பக்கத்து நஞ்சையெல்லாம்
புழுதி படர்ந்த பாலையாய்...
அங்கு சாலைவாகனங்கள் தவிர
சுற்றிலும் உயிர்ப்பியக்கமே இல்லை
கொதிக்குது நெஞ்சம்....
கொள்ளை போனது மலை மட்டுமா....


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.