Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Semmalar
Semmalar
ஏப்ரல் 2009
கற்றவை கற்றபின்

- ந.தேசநேசன்

தீராத விளையாட்டுப் பிள்ளையாய்
தினமும் வருகின்றது
என்வீட்டுத் தொட்டிச் செடியின்
பூவில் தேனெடுக்க
வண்ணத்துப்பூச்சி.

மெல்லிய காற்றில்
படபடக்கும் சிறகில்
மெய் மறக்கின்றது குழந்தை
நிறங்களின் அழகும்
நிதானித்து அமர்வதும்
உள்ளுணவர்வை வருடி
வாழ்வின் ஆரவாரத்தை
அச்சமின்றி
சுதந்திரமாய்க் கழிக்கிறது

என்னதான்
சிலந்தி தன்எச்சிலில்
வலை பின்னிப் பிழைத்தாலும்
வண்ணத்துப் பூச்சியின்
வசந்த வாழ்க்கையைக் கண்டு
குதூகலிக்கும்
குழந்தையின் மனதில்
எங்கே
புரியப் போகிறது
வலையில் சிக்க வைத்து
கொலை செய்யும்
சிலந்தியின்
குரூரத்தை....


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.